Published:Updated:

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி மார்கழித் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

தேரோட்டம்
News
தேரோட்டம்

'ஆத்மநாதா, மாணிக்கவாசகா' என்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை இழுத்தனர். நான்கு வீதிகளிலும் பக்தர்கள் கூடி நின்று அர்ச்சனை செய்து மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவிலில், புகழ்பெற்ற திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலில் வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா நடைபெறுகிறது.

இதில், ஆனித் திருமஞ்சனமும், மார்கழித் திருவாதிரை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதன்படி, மார்கழித் திருவாதிரை திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி மார்கழித் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 3ம் தேதி காலை பிட்டுக்கு மண்சுமந்த பேரருள் காட்சியில் வீதி உலாவும், இரவு சப்பரத்தில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளி பக்தருக்கு அருளினார். 'ஆத்மநாதா, மாணிக்கவாசகா' என்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை இழுத்தனர். நான்கு வீதிகளிலும் பக்தர்கள் கூடி நின்று அர்ச்சனை செய்து மாணிக்கவாசகரை வழிபட்டனர்.