Published:Updated:

புதுக்கோட்டை: ஐம்பதாயிரம் பக்தர்களுடன் களைகட்டிய வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்!

வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்

சிவாசார்யார்கள் வீரமாகாளியம்மன் கோயில் மூலஸ்தான விமானக் கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றிக் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

புதுக்கோட்டை: ஐம்பதாயிரம் பக்தர்களுடன் களைகட்டிய வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்!

சிவாசார்யார்கள் வீரமாகாளியம்மன் கோயில் மூலஸ்தான விமானக் கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றிக் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

Published:Updated:
வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதையொட்டி, திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது, திருப்பணிகள் முடிந்து கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கலசங்களில் நிரப்பி யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்
வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்

தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாசார்யர்கள் மேள தாளம் முழங்க கலசங்களைத் தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனர்.

பின்னர் சிவாசார்யர்கள் வீரமாகாளியம்மன் கோயில் மூலஸ்தான விமானக் கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றிக் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். 'ஓம்சக்தி, பராசக்தி' என்ற கோஷம் முழங்க பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டுகளித்தனர். புனிதநீர் பக்தர்கள் மீது தெளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமைச்சர் மெய்யநாதன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி, நகராட்சித் தலைவர் ஆனந்த், திருப்பணி குழு செயலாளர் முத்து, அறநிலையத்துறை இணை ஆணையர் சூர்யநாராயணன் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட் பல்வேறு பகுதிகளிலுருந்தும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.