Published:Updated:

புதுக்கோட்டை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

புதுக்கோட்டை கும்பாபிஷேக விழா

யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீரை கருவூராரின் வாரிசுகள் தலையில் சுமந்து ஊர்வலமாகக் கோயிலின் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

புதுக்கோட்டை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீரை கருவூராரின் வாரிசுகள் தலையில் சுமந்து ஊர்வலமாகக் கோயிலின் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

Published:Updated:
புதுக்கோட்டை கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரிசூல பிடாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளாகக் கோயில் கட்டுமானப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது, அந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டுக் கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் 12 வது பதினென் சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூரார்‌ தலைமையில் தமிழ் மொழியில் இந்து வேத மந்திரங்கள் பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கருவூராரின் வாரிசுகள் தலையில் சுமந்து ஊர்வலமாகக் கோயிலின் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

புதுக்கோட்டை கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை கும்பாபிஷேக விழா

கருடன் ராஜகோபுரத்திற்கு மேல் வட்டமிட பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பினர்.

ராஜ கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றிக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது.

மூலவர் பிடாரி அம்மனுக்கு கலச புனித நீர் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின்னர் பிடாரி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்லாயிரக் கணக்கானோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.