Published:Updated:

சபரிமலை பதினெட்டாம் படிக்கு ஹைட்ராலிக் மேற்கூரை... இனி மழை வந்தாலும் தடைபடாது படிபூஜை!

ஹைட்ராலிக் மேல்கூரை மாடல் போட்டோ

சபரிமலையில் தற்போது படி பூஜை நடக்கும் சமயங்களில் தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதினெட்டாம் படியில் நிரந்தரக் கூரை போடும் விதமாக ஹைட்ராலிக் கூரை ஒன்று அமைக்கப்பட உள்ளது.

சபரிமலை பதினெட்டாம் படிக்கு ஹைட்ராலிக் மேற்கூரை... இனி மழை வந்தாலும் தடைபடாது படிபூஜை!

சபரிமலையில் தற்போது படி பூஜை நடக்கும் சமயங்களில் தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதினெட்டாம் படியில் நிரந்தரக் கூரை போடும் விதமாக ஹைட்ராலிக் கூரை ஒன்று அமைக்கப்பட உள்ளது.

Published:Updated:
ஹைட்ராலிக் மேல்கூரை மாடல் போட்டோ

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உலக பிரசித்திபெற்றது. ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதியும், பதினெட்டாம் படியும், மகரவிளக்கும் மிகவும் புனிதமானவை. மலையில் கல்லையும் முள்ளையும் மிதித்து வந்த பக்தர்களின் பாதங்களுக்கு பக்தி உணர்வை கொடுப்பது பதினெட்டாம் படி. ஐயனைக் கண்ணார கண்டு தரிசிப்பதற்கு நம்மைப் படிப்படியாக உயர்த்துவது பதினெட்டாம் படி. இருமுடி தலையில் இருந்தால்தான் சிறப்புமிக்க பதினெட்டாம் படியில் ஏறிச்செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பதினெட்டாம் படிக்கு படிபூஜைக்கு 75,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிபூஜை நடக்கும் நேரங்களில் மழை வந்தால் பூஜைக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. அடைமழைகாரணமாக படிபூஜை நடத்த முடியாத நிலையும் இருந்து வந்தது.

சபரிமலை பதினெட்டாம் படி பூஜை
சபரிமலை பதினெட்டாம் படி பூஜை
பைல் போட்டோ

இதனால் பதினெட்டாம் படியின் மேல் பகுதியில் கண்ணாடியால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த மேற்கூரையால் கொடிமரத்தில் நேரடியாக சூரிய ஒளி படவில்லை என்று தேவபிரசன்னத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து கண்ணாடி மேற்கூரை அகற்றப்பட்டது. தற்போது படிபூஜை நடக்கும் நேரங்களில் தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிரந்தரக் கூரை போடும் விதமாக ஹைட்ராலிக் கூரை ஒன்று அமைக்கத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஹைட்ராலிக் மேற்கூரையை அமைப்பதற்காக ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட விஸ்வ சமுத்திரா என்ற கட்டுமான கம்பெனி சபரிமலை கோயிலுக்கு 70 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கி உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் இப்பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கூரை தேவை இல்லாத நேரங்களில் இருபுறமும் மடித்து வைக்கும் வகையிலும் இந்தப் புதிய ஹைட்ராலிக் கூரை அமைக்கப்பட உள்ளது. நாளைக் காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் இந்த மேற்கூரை அமைக்கும் பணி தொடங்குகிறது. இதற்காக ஐகோர்ட் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

சபரிமலை
சபரிமலை

மேற்கூரை அமைக்கும் பணியுடன் பதினெட்டாம் படியின் முன்பக்கம் உள்ள கருங்கற்கள் மாற்றப்பட்டு, கிரானைட் தரை அமைத்து அழகுபடுத்தப்பட உள்ளது. கொரோனா காரணமாக சபரிமலைக்கு வருவாய் குறைந்த நிலையில் நன்கொடையாளர்கள் மூலம் இந்தப் பணிகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism