Published:Updated:

தாக்குதலில் தப்பித்து வெளிநாடு சென்ற தமிழர்; கோயிலுக்கு ரூ.10 கோடி காணிக்கை - நடந்தது இதுதான்!

மகாலட்சுமி கோயில்

இரண்டு வாரத்திற்குப் பிறகு மும்பையில் இருந்து ஓமனுக்கு வேலைக்கு சென்றார். மாதம் 18,000 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற பெரியசாமியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1,400 கோடியாகும்.

தாக்குதலில் தப்பித்து வெளிநாடு சென்ற தமிழர்; கோயிலுக்கு ரூ.10 கோடி காணிக்கை - நடந்தது இதுதான்!

இரண்டு வாரத்திற்குப் பிறகு மும்பையில் இருந்து ஓமனுக்கு வேலைக்கு சென்றார். மாதம் 18,000 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற பெரியசாமியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1,400 கோடியாகும்.

Published:Updated:
மகாலட்சுமி கோயில்
மும்பையில் மகாலட்சுமி கோயில் மிகவும் பிரபலம். இக்கோயில் 200 ஆண்டுகள் பழைமையானது. கர்ப்பகிரகத்தில் மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என முப்பெரும் தேவியர்கள் குடிகொண்டிருக்கின்றனர். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மகாலட்சுமி கோயிலுக்கு வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர் கோயில் கர்ப்பகிரத்தை முழுக்க தங்கத் தகடுகளைக் கொண்டு உருவாக்க ரூ.10 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.

ஓமன் நாட்டில் வசிக்கும் பெரியசாமி என்பவர் 2008 -ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது மும்பையில் இருந்தார். வெளிநாட்டில் வேலைக்காக மும்பையில் இருந்து விமானம் ஏறுவதற்காக வந்திருந்தார். மும்பையில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் இரண்டு வாரம் விமானப் போக்குவரத்து தடைப்பட்டு மும்பையில் சிக்கிக்கொண்டார். எப்படியாவது மும்பையில் இருந்து பாதுகாப்பாகச் செல்ல உதவும்படி மும்பை மலாலட்சுமி அம்மனை வேண்டிக்கொண்டார்.

கடற்கரையொட்டி இருக்கும் மகாலட்சுமி கோயில்
கடற்கரையொட்டி இருக்கும் மகாலட்சுமி கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வாரத்திற்குப் பிறகு மும்பையில் இருந்து ஓமனுக்கு வேலைக்கு சென்றார். மாதம் 18,000 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற பெரியசாமியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1,400 கோடியாகும். ஓமன் சென்ற பிறகு சில ஆண்டுகள் மட்டும் வேலை செய்த பெரிய சாமி சிறிய அளவில் மின்சார டிரான்ஸ்பார்மர் தொழிலைத் தொடங்கினார். அது விரிவடைந்து இன்று மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார். இந்த அளவுக்குத் தன்னை உயர்த்தியதற்காக அடிக்கடி மும்பை மகாலட்சுமி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி வந்து செல்லும் போதுதான் கோயிலில் அம்மன் இருக்கும் அறையில் கடல் உப்புக்காற்றால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக தங்கம் மற்றும் சுத்தமாக காப்பர் பிளேட் பொருத்தும் எண்ணம் உருவானது. உடனே இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் நேரடியாகப் பேசாமல் இவ்விவகாரத்தில் மகாலட்சுமி கோயில் நிர்வாகத்துடன் பேசி அம்மனுக்கு நன்கொடை கொடுக்க உதவும்படி காஞ்சி காமகோடி சங்கர மடத்திடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சங்கர மடம் சார்பாக பெரியசாமிக்காக மகாலட்சுமி கோயில் நிர்வாகத்துடன் ஸ்ரீதர் பேச்சுவார்த்தை நடத்தினார். கோயில் நிர்வாகம் கொள்கை அளவில் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறது. கோயில் அறக்கட்டளை மற்றும் மும்பை புராதானச் சின்ன பாதுகாப்பு கமிட்டி சொல்கின்ற படி கோயில் கர்ப்பகிரக அறை மேல் தகடுகள் தயாரித்துக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக ஸ்ரீதர் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணியைத் தொடங்கும் முன்பு மும்பை புராதானச் சின்ன பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் பெறப்படும். பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்று தெரிவித்தார். இது குறித்துக் கோயில் பொது மேலாளர் சரத் சந்திரா கூறுகையில், "ஏற்கெனவே இருப்பது போன்ற அமைப்பில் கர்ப்ப கிரக அறையை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே இருப்பதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் கவனத்துடன் செய்து முடிக்கப்படும். இது தொடர்பான திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். இது தொடர்பாக விரிவான திட்டத்திற்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.25 கோடி பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகளைத் தொடங்கிய பிறகு ஒரு ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி வடிவமைப்புக்குக் கோயில் அறங்காவலர் குழு ஒப்புதல் கொடுத்த பிறகு மும்பை புராதான கமிட்டியில் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்படும்" என்று ஸ்ரீதர் தெரிவித்தார். பணிகள் முடிந்த பிறகும் ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு செய்து ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவை சரி செய்யப்பட இருக்கிறது.