Election bannerElection banner
Published:Updated:

பாட்டி வைத்தியமும் வர்ம மருத்துவமும்... உள்ளங்கை விதை சிகிச்சை வகுப்பில் நீங்களும் பங்கேற்கலாம்!

உள்ளங்கை விதை சிகிச்சை
உள்ளங்கை விதை சிகிச்சை

சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் எளிய வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்பு, வரும் 15.11.2020 ஞாயிறன்று (காலை 7 முதல் 8:30 மணி வரை) ஆன்லைன் வகுப்பாக நடைபெறும் (முன்பதிவு கட்டணம் ரூ.500).

“ஓமென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே உண்டப்பா, நூற்றெட்டு வர்மம் தானே” -

வர்ம ஒடிவு முறிவு சர சூத்திரம் - அகத்தியப் பெருமான்.

வர்மம் என்னும் சித்தர்களின் மர்மக் கலை உலக உயிர்களை இயற்கை வழியில் உய்விக்கப் பிறந்த கலை என்பர். போர்க் கலையாகவும் பின்னர் மருத்துவக் கலையாகவும் பரிணமித்த இந்த அற்புதக் கலை உண்மையில் பரம்பொருளை ஆன்மா கண்டுக்கொள்ளவென்றே தோன்றிய முதல் கலை என்கிறார் அகத்திய பெருமான். வர்மம் குறித்து 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அகத்தியப் பெருமான் ஆறு ஆதாரங்களில் 108 வர்மங்கள் தங்கி உடலின் ஒட்டுமொத்த இயக்கங்களையும் ஆளுகின்றன என்கிறார்.

ஆ என்றால் பசு (ஆன்மா) தாரம் என்றால் தங்கி நிற்கும் இடம். ஆன்மா தங்கிச் செல்லும் இந்த 108 இடங்களை அவ்வப்போதுத் தூண்டிச் செயல்படுத்தினால் உயிர்ச் சக்தி பெருகி நோயற்ற நிலையை உடல் பெரும் என்கிறார்.

வர்மக்கலை
வர்மக்கலை

வாழ்வோடு இணைந்த வர்மக்கலை

பிரமாண்டமான கட்டடத்துக்கு ஒரு வரைபடம் இருப்பதைப் போல உடலின் அத்தனை நரம்புகளும் நாடிகளும் ஒடுங்கிச் செல்லும் இடம் உள்ளங்கைகள். அதனாலேயே ஜோதிடக் கலையில் உள்ளங்கை முக்கியத்துவம் பெற்றது. உடலின் ஒட்டுமொத்த வர்மப் புள்ளிகளும் இணையும் உள்ளங்கையில் வர்ம சிகிச்சை செய்யும் முறை ஆதியிலே உருவானது. உள்ளங்கைகளைத் தொட்ட உடனேயே எந்த மாதிரியான நோய் தாக்கி உள்ளது என்பதை சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை நம்முடைய கிராமங்களின் மருத்துவச்சிகள் சொல்லி இருந்ததைப் பெரியோர்கள் சொல்லிக் கேட்டு இருக்கலாம். வர்ம சிகிச்சை நம் வாழ்வியலோடு தொடர்ந்து இருந்து வந்த சாதாரண கலைதான். குழந்தைகளுக்கு 'தொக்கு' எடுப்பது, வறட்டு இருமலுக்கு உச்சி முடி தூக்குவது, மூச்சுப் பிடிப்புக்கு முதுகுப் பகுதியில் தட்டு கொடுப்பது, சொடக்குப் போடுவது, மூட்டு உள்ளிட்ட வலிகளுக்கு எண்ணெய்யால் வழித்து விடுவது என எல்லாமே வர்மத்தின் ஓர் அங்கம்தான்.

உள்ளங்கை மருத்துவம்

ஆங்கில மருத்துவம் வந்தது, எடுத்ததற்கு எல்லாம் மருத்துவமனை என ஓடினோம். வர்மம் என்ற அரிய மருத்துவக்கலை தேவையில்லாமல் போனது. உண்மையில் வீட்டு வைத்தியம் என்பது வர்மம் தான். தொடுவது, தட்டுவது எல்லாமே வர்மத்தின் வழி வந்ததுதானே. மறந்து போன இந்த அற்புதமான கலையை இப்போது உள்ளங்கை மருத்துவம் என்ற வகையில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

உள்ளங்கை விதை சிகிச்சை
உள்ளங்கை விதை சிகிச்சை

வர்மம் என்பது நோய்களைத் தீர்க்க மட்டுமின்றி, இறைவனை அறிந்து கொள்ளவும், யோகத்தோடும், அறிவியலோடும், வானியலோடும், மனித உணர்வுகளோடும் தொடர்பு கொண்ட ஓர் எளிய கலை. இதை முறைப்படிக் கற்றுக்கொள்ளப் படிப்படியாக முயல்வோம். இந்த எளிய வர்மப் புள்ளி வைத்திய முறையை உங்களுக்குப் பயிற்றுவிக்க வருகிறார்கள் வர்ம வைத்திய முறை ஆசான் கம்பம் பாண்டியராஜன் மற்றும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத் தலைவர் மு. அரி. தமிழகத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் சித்தர்கள் அருளிய இந்த வர்ம சிகிச்சையான உள்ளங்கை விதை சிகிச்சை குறித்து வாசகர்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்று சக்திவிகடன் இந்தப் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருந்தில்லா மருத்துவம்... வர்மப் புள்ளி வைத்திய முறை... வியக்கவைக்கும் உள்ளங்கை விதை சிகிச்சை!

வாசகர்களின் கவனத்துக்கு...

சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் எளிய வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்பு, வரும் 15.11.2020 ஞாயிறன்று (காலை 7 முதல் 8:30 மணி வரை) ஆன்லைன் வகுப்பாக நடைபெறும் (முன்பதிவு கட்டணம் ரூ.500).

இந்த வகுப்பு, பாரம்பர்யமான வர்மப்புள்ளி வைத்தியத்தின் சிறப்புகள் குறித்த தகவல் அறிதலுக்காக மட்டுமே.

இந்த சிகிச்சை முறைகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சிகிச்சை முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஆசான் கம்பம் பாண்டியராஜன்
ஆசான் கம்பம் பாண்டியராஜன்

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404

Date: நவம்பர் 15, 2020 | Time: காலை 7.00- 8.30

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு