Published:Updated:

ஆடிப்பூர விழா: சாத்தூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளைக்காப்பு வைபவம்!

வளைக்காப்பு

ஆடிப்பூரத்தையொட்டி சாத்தூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தையொட்டி மாரியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், வாசனை திரவியம் உள்பட 16 வகை திவ்ய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அலங்காரத்துடன், வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. அப்போது நேர்த்திக்கடன் செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் கோயிலுக்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன்

ஆடிப்பூரத்தையொட்டி சாத்தூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர். இதேப்போல சாத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!