Published:Updated:

விதை விநாயகர்: வளரக் காத்திருக்கும் மரங்கள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பக்தர்கள்!

விதை விநாயகர்

களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உள்ளே மா, பலா, வேம்பு, புளி ஆகிய மரங்களின் விதைகள் வைக்கப்படுகின்றன. இந்த விதை விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது விதைகள் முளை விட்டு வளரும் என்கின்றனர்.

விதை விநாயகர்: வளரக் காத்திருக்கும் மரங்கள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பக்தர்கள்!

களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உள்ளே மா, பலா, வேம்பு, புளி ஆகிய மரங்களின் விதைகள் வைக்கப்படுகின்றன. இந்த விதை விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது விதைகள் முளை விட்டு வளரும் என்கின்றனர்.

Published:Updated:
விதை விநாயகர்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டிப் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படுவதுடன், பக்தர்கள் தங்களின் வீடுகளிலும் சிலைகளை வைத்து வழிபட்டு சில தினங்களுக்குப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பார்கள். இதற்காக அரை அடி முதல் பல மீட்டர் உயரம் வரையிலான சிலைகளை உருவாக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விதை விநாயகர் சிலை செய்யப்படுகிறது
விதை விநாயகர் சிலை செய்யப்படுகிறது

இந்த ஆண்டு விதை விநாயகர் சிலை பக்தர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொது இடங்களில் வைப்பதற்காக ஏற்கெனவே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு பிரமாண்டமான சிலைகளை வடிக்கும் பணிகள் நடக்கின்றன. அத்துடன், பக்தர்கள் தங்களுக்குப் பிடித்தமான விநாயகர் சிலைகளை இப்போதே வாங்கிச் செல்லத் தொடங்கி விட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள கூனியூரில் செயல்பட்டு வரும் காருகுறிச்சி மண்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவு குடிசைத்தொழில் சங்கத்தினரும் விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள். அங்கு இந்த ஆண்டு விதை விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

விதை விநாயகர் சிலை வடிக்கும் பணியில் இருந்த கிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில்,

“இந்தப் பகுதியில் 400-க்கும் அதிகமான மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தோம். இப்போது இந்தத் தொழிலுக்கு மண் கிடைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் 170 குடும்பத்தினர் மட்டுமே தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மண் பானைகள், விளக்கேற்றும் சட்டி, மண்ணால் செய்யப்பட்ட ஃபிரிட்ஜ் உள்ளிட்ட 200 வகையான பொருள்களை உற்பத்தி செய்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்காக எங்களிடம் சிலை செய்து கொடுக்க ஆர்டர் கொடுப்பார்கள். அதை முழுக்கவே களிமண்ணால் செய்து கொடுக்கிறோம். இந்த ஆண்டு விதை விநாயகர் சிலை செய்கிறோம். அதில் மரங்களின் விதைகளை வைத்துக் கொடுக்கிறோம். அரை அடி முதல் 5 அடி வரையிலான சிலைகளில் விதைகளை வைத்துக் கொடுக்கிறோம்.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை விநாயகர் சிலைகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதை விநாயகர் சிலைகள்

பொதுவாக சிலைகளை ஆறு, குளம் ஆகியவற்றில் கரைப்பார்கள். அப்போது விதைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கும் இடங்களில் முளைத்துப் பசுமைக் காடுகளாக மாறும். வானுயர வளரக் காத்திருக்கும் விதைகள் விநாயகர் சிலைகளில் இருப்பதைச் சொல்லியே பொதுமக்களிடம் கொடுக்கிறோம். அதனால் அவர்களும் உற்சாகத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். இந்த விதைகள் முளைத்துப் பசுமைக் காடுகள் உருவானால் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி" என்றார்.

நெல்லை மாவட்டம் முழுவதுமே இந்த ஆண்டு விதை விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால் அடுத்த சில வருடங்களில் வளர்ந்து நிற்கும் பசுமையான மரங்களைக் காணமுடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.