Published:Updated:

தொல்லைகள் நீக்கும் ஷீர்டி ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜை... நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம்!

பாபாயணம்
பாபாயணம்

வாழும்போது மட்டுமல்ல இன்றும் பல்வேறு அற்புதங்களை நடத்தித் தனது பக்தர்களைக் காத்து வரும் சாய்பாபா உங்களை உங்கள் வீட்டுக்கே வந்து அருளாசி செய்யவிருக்கிறார். அதற்காகவே இந்த சாய் சத்ய நாராயண பூஜையை நடத்தவிருக்கிறோம்.

அருளே வடிவானவர் சாய்பாபா. கருணைமிக்க சாய்பாபா, எப்போது தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கத் திருவுளம் கொள்கிறாரோ, அப்போதே தன் பக்தர் எங்கிருந்தாலும் அவரைத் தன்னிடம் அழைத்து, அவர்களுக்கு அருள்புரிகிறார். “எனது பக்தன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவன் மூவாயிரம் மைல்களுக்குத் தொலைவில் இருந்தாலும் காலில் நூல் கட்டி உள்ள சிட்டுக்குருவியை இழுப்பதுபோல அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான்” என்பார் சாயிநாதர்.

அது உண்மைதான். இருந்த இடத்திலிருந்தே தனது அருள் பார்வையால் பக்தனைச் சுண்டி இழுத்து அருள்பவர் பாபா. கனவில் வருவார், யார் மூலமாகவோ வந்து தன்னிடம் வருமாறு அறிவுறுத்துவார், விபூதி, குங்குமம், சந்தனம் எனத் தனது படங்களில் இருந்து கொட்டச் செய்து தன்னிடம் வரச் செய்வார். இப்படி பாபாவின் அருளாடல்களுக்கு அளவே இல்லை எனலாம்.

சாய்பாபா
சாய்பாபா

தான் வாழ்ந்தபோதே ஒரு பற்றற்ற துறவியாக மாபெரும் ஞானியாக வாழ்ந்து வந்தார். தான் உடுத்திருந்த கப்னி என்ற உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்தவர் பாபா. பக்தர்கள் தனக்களிக்கும் பழங்கள், நாணயங்கள், பொருள்களை அப்போதே தனது பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். தனது மண்ணுலக வாழ்வு நிறைவு பெறப்போவதை அறிந்த பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்து தன்னிடமிருந்த 9 நாணயங்களை அளித்துவிட்டார். அதுவே அவர் பிரிவைச் சொன்ன முதல் அறிகுறி. 1918-ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் சாயிநாதர் மகாசமாதியில் ஆழ்ந்தார். அப்போதும் அவரது பக்தர்கள், பாபா வழக்கம் போல தன்னை முழுவதும் ஒடுக்கிக் கொள்ளும் தியானத்தில் இருப்பதாகவே நம்பினர். ஆனால் என்றென்றும் இருந்து அருள்பாலிக்க அந்த மகான் மகாசாமதி அடைந்தார் என்பதே உறுதியானது. வாழும்போது மட்டுமல்ல இன்றும் பல்வேறு அற்புதங்களை நடத்தித் தனது பக்தர்களைக் காத்து வரும் சாய்பாபா உங்களை உங்கள் வீட்டுக்கே வந்து அருளாசி செய்யவிருக்கிறார். அதற்காகவே இந்த சாய் சத்ய நாராயண பூஜையை நடத்தவிருக்கிறோம்.

கலியுகத்தில் தெய்வமாய் திகழும் ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவுக்கு உகந்த தனித்துவம் மிக்க பூஜை ஷீர்டி ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜை. பாபாவை தரிசிக்க ஷீர்டிக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு நடைபெறும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு பூஜிப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள். இதில் கலந்து கொள்வது அத்தனை எளிதானதும் அல்ல. சாயி அருள் இருந்தால் மட்டுமே இது கிட்டும்.

இத்தனை பெருமை வாய்ந்த இந்த சத்ய நாராயண பூஜையை சக்தி விகடன் வாசகர்களான உங்களுக்காக நடத்தவிருக்கிறோம். ஷீர்டி ஸ்ரீசாயிநாதரின் மகா சமாதித் திருநாளான விஜயதசமி புண்ணிய தினத்தில் - 26.10.2020 திங்கள்கிழமை அன்று (காலை 9:30 - 12:00 மணி வரை) சக்தி விகடனும் துவாரகாமாயி ஆத்மஞானியர் மையமும் இணைந்து நடத்தும் இந்த அற்புதமான வழிபாட்டில், வாசகர்களும் கலந்து கொள்ளலாம். பெருந்தொற்று நிலவும் காலம் என்பதால் `இணைய வீடியோ’ மூலம் (Zoom Meet) கலந்துகொண்டு வழிபட்டுப் பலன் அடையலாம்.

சத்யநாராயண பூஜை
சத்யநாராயண பூஜை

பூஜைக்குத் தேவையான மங்கலப் பொருள்கள்:

1. ஷீர்டி ஸ்ரீசாயிபாபா திருவுருவச்சிலை அல்லது படம்,

2. ஸ்ரீசத்யநாராயணரின் திருவுருவம் அல்லது படம்

3. மஞ்சள்

4. குங்குமம் (விபூதி)

5. வெற்றிலை - பாக்கு

6. அட்சதை (அரிசியைச் சிறிதளவு மஞ்சள் பொடியில் தண்ணீர் விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்), உதிரிப் பூக்கள்.

7. பஞ்சாமிர்தம்

8. கற்பூரம்

9. சந்தனம், ஜவ்வாது

10. ஒரு பித்தளை தாம்பாளம், இரண்டு தட்டுகள்

12. ஒரு கலசம் (சொம்பு)

13. சுத்தமான தண்ணீருடன் பஞ்ச பாத்திரம் - உத்தரணி

14. தேங்காய்கள்- 5

15. அச்சு வெல்லம் 2 கட்டி

16. பால் - அரை கப்

17. நவதானியங்கள் ( சிறிய அளவில் ஒன்பது தானியங்கள் சேர்ந்த கலவை)

18. இரண்டு ரூபாய் நாணயம்

19. நைவேத்தியம் செய்ய கோதுமை மாவு கேசரி

20. மாவிலை

பாபாயணம் - 54

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷீர்டி ஸ்ரீசாயிசத்யநாராயணர் பூஜை - சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் நன்மைக்காக வழிபாட்டில் சிறப்புச் சங்கல்பமும் பிரார்த்தனையும் நடைபெறும்.

விஜய தசமித் திருநாளான 26.10.2020 திங்களன்று காலை 9:30 மணியளவில் வழிபாடு தொடங்கும். முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள் வீடியோ (zoom meet) மூலம் வழிபாட்டை தரிசிக்கலாம். அதற்கான இணைப்பு முகவரி (zoom meet link) முதல் நாளே அதாவது 25.10.2020 ஞாயிறன்று வாசகர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள், தரிசனத்துக்காக வீடியோ இணைப்பில் இணைவதோடு, அவரவர் வீட்டிலிருந்தபடி வழிபாடும் செய்யலாம். அங்ஙனம் வழிபட விரும்பும் வாசகர்கள், தங்கள் வீட்டில் பூஜைக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொருள்களுடன் முன்னதாகத் தயாராகிக்கொள்ளவும்.

பாபாயணம்
பாபாயணம்

வாசகர்கள் அவரவர் வீட்டிலேயே வழிபட ஏதுவாக, ஸ்ரீசத்ய நாராயணர், ஷீர்டி ஸ்ரீசாயிபாபா வண்ணப்படங்களும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும் (PDF வடிவில்) மின்னஞ்சல் மூலம் முன்னதாக அனுப்பிவைக்கப்படும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்களுக்கு ஷீர்டியில் இருந்து விசேஷமாகப் பெறப்பட்ட புனிதம் மிக்க உதிப் பிரசாதம் 1.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999; 97909 90404

நீங்களும் இந்த பூஜையில் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு