Published:Updated:

`அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கம்' - சென்னையிலேயே தரிசிக்கலாம்!

ஜோதிர்லிங்கம்
ஜோதிர்லிங்கம்

இதுவரை இத்தகைய கண்காட்சியை 144 முறை நாடுமுழுவதும் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. இது 145 வது கண்காட்சி.

உலகமெங்கும் பரவியிருக்கும் ஆன்மிக இயக்கமான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அமர்நாத் பனி லிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசனம் உள்ளிட்ட கண்காட்சி ஒன்றை இன்று சென்னை, ஐ.சி.எப் இல் தொடங்கியுள்ளனர்.

ஜோதிர்லிங்கம்
ஜோதிர்லிங்கம்

இந்தக் கண்காட்சி இன்று தொடங்கி அடுத்த ஏழு நாள்கள் 24.02.2020 வரை நடைபெறவிருக்கிறது. மகாசிவராத்திரி (21.02.2020) நிகழ்வை முன்னிட்டு சென்னை ஐ.சி.எப், ஆர்.பி.ஃப் மைதானத்தில் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது பிரம்மாகுமாரிகள் அமைப்பு. இதில் புகழ் பெற்ற அமர்நாத் பனிலிங்கம், கேதார்நாத், காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

ஒரு இடத்தில் பன்னிரு ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கும் அனுபவத்தைப் பெற ஏராளமானோர் இந்தக் கண்காட்சியை ஆவலுடன் வந்து காண்பார்கள். இதுவரை இத்தகைய கண்காட்சியை 144 முறை நாடுமுழுவதும் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. இது 145 வது கண்காட்சி. குகை போன்ற பிரமாண்ட அமைப்பில் நுழைந்த உடனே பக்தர்கள் பரவசமடையும் வகையில் முதலாவதாக அமர்நாத் பனி லிங்கம் அமைந்துள்ளது.

ஜோதிர்லிங்கம்
ஜோதிர்லிங்கம்

குகையில் இறைவன் பனி லிங்கத் திருமேனியனாக தத்ரூபமாகக் காட்சியளிக்கிறார். தொடர்ந்து உள்ளே செல்ல சோமநாத், மல்லிகார்ஜூன், மகாகாளேஸ்வர், ஓங்காரேஸ்வரர், வைத்யநாத், பீமாசங்கர், ராமேஸ்வரம், நாகேஸ்வரர், விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், கேதார்நாத் மற்றும் கிருஷ்ணேஸ்வர் முதலிய லிங்கத் திருமேனிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி நாள்களில் காலை 8 மணிக்குத் தொடங்கும் ஜோதிர்லிங்க தரிசனம் இரவு 9 மணிவரை நீடிக்கிறது. மேலும் ராஜயோக மையம் குறித்த கண்காட்சியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், ஒளி ஒலி காட்சிகள் மற்றும் தேவி தரிசனம் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.

இது தவிர அம்பத்தூர், அடையாறு, ஆவடி, வேளச்சேரி, தாம்பரம் எனச் சென்னையில் மொத்தம் 30 பகுதிகளில் 3 ஜோதிர்லிங்கங்கள் பக்தர்கள் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் காலைமுதல் இந்தக் கண்காட்சியை ஆவலுடன் தரிசித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு