Published:Updated:

சீர்வரிசை நிகழ்ச்சிக்காக வெடித்த பட்டாசு; காற்றில் தீப்பொறி பறந்ததில் ராஜகோபுரத்தில் பயங்கர 'தீ'

தீ விபத்து

கோயிலின் ராஜகோபுரத்தில் பற்றி எரிந்துக்கொண்டிருந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப்போராட்டத்துக்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

சீர்வரிசை நிகழ்ச்சிக்காக வெடித்த பட்டாசு; காற்றில் தீப்பொறி பறந்ததில் ராஜகோபுரத்தில் பயங்கர 'தீ'

கோயிலின் ராஜகோபுரத்தில் பற்றி எரிந்துக்கொண்டிருந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப்போராட்டத்துக்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

Published:Updated:
தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் கும்பாபிஷேக பணிக்காக தற்போது புனரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பணியில், கோயிலின் ராஜகோபுரமானது சீரமைப்புக்காக தென்னங்கீற்றால் பின்னப்பட்ட ஓலைகள் மற்றும் பிளாஸ்டிக் தார்பாய்களால் சுற்றி மறைக்கப்பட்டிருந்தது.

கோபுரத்தில் தீ
கோபுரத்தில் தீ

இந்தநிலையில் அப்பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக சீர்வரிசை கொண்டும் செல்லும் வைபவம் இன்று நடைபெற்றது. இதில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லும்போது திருமண வீட்டார் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது உயரே எழுந்த தீப்பொறி காற்றில் பறந்து ராஜகோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ மள மளவென பரவத்தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓலைகீற்றுகளிலும் தீ பரவியதால் ராஜகோபுரத்தை சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கோபுரத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்துவந்த தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள், கோயிலின் ராஜகோபுரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப்போராட்டத்துக்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

இந்த தீ விபத்து தொடர்பாக சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசியில் பிரசித்திப் பெற்ற கோயிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.