Published:Updated:

தில்லை நடராஜருக்குத் தங்கவில்வ மாலை; பொன்னில் சிவபுராணம் - டிச.25 சென்னையில் தரிசிக்கலாம்!

பொன்னில் பொறிக்கப்பட்ட சிவபுராணம்!
பொன்னில் பொறிக்கப்பட்ட சிவபுராணம்!

சாமானிய சிவ பக்தர்களின் அன்பான கூட்டுப் பொருளுதவியால் உருவான இச்சரம் இருபது சவரனில் செய்யப்பட்டுள்ளது.

திருவாசகம் தமிழ் வேதங்களில் முதன்மையானது. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது ஆன்றோர் வாக்கு. திருவாசகத்தினை எழுதியவர் மாணிக்க வாசகர். அப்படிப்பட்ட மணிவாசகப் பெருமான் பாட, அழகிய சிற்றம்பலம் உடையானே தன் திருக்கரத்தால் எழுதியது சிவபுராணம்.

தங்க வில்வ மாலை
தங்க வில்வ மாலை

புகழ்மிக்க இந்த புராணம் எப்போதும் தில்லை அம்பலத்தானின் திருமேனியில் ஓர் அணியாகத் திகழ வேண்டும் என்று அற்புதமான திருப்பணியைச் செய்திருக்கிறார்கள் அடியவர்கள். அதை வரும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் இறைவனுக்குச் சூட்டயிருக்கிறார் சிதம்பரம் மௌனகுரு திருமடத்தின் குருமகாசந்நினம் ஶ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

பொன்னால் வில்வ இலைகள் செய்து அதை மாலையாகக் கோத்து அதைத் தில்லை அம்பலத்தானுக்குச் சூட்டவிருக்கின்றனர். அந்த மாலையில் உள்ள பொன் வில்வ இலைகள் ஒவ்வொன்றிலும் சிவபுராணம் பொறிக்கப்பட்டுள்ளது.

பொன்னில் பொறிக்கப்பட்ட சிவபுராணம்!
பொன்னில் பொறிக்கப்பட்ட சிவபுராணம்!

சிவபுராணத்தில் மொத்தம் 95 வரிகள். அவை பதினோரு பொன் வில்வ இலைகளில் பொறிக்கப்பட்டு, ருத்திரமாலையாகத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாலையைக் கோயில்களுக்குத் திருப்பணி செய்யும் பொற்கொல்லர், செல்வரத்தினம் தீட்சிதரின் வழிகாட்டுதலில், முறைப்படி வடிவமைத்துள்ளார்.

சாமானிய சிவ பக்தர்களின் அன்பான கூட்டுப் பொருளுதவியால் உருவான இச்சரம் இருபது சவரனில் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வில்வ இலையும் கிட்டத்தட்ட 1.8 சவரன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்க வில்வ மாலையை அனைவரும் தரிசித்து சிவபுண்ணியம் ஈட்டும் வண்ணம் 25.12.19 அன்று காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை, சென்னை, அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் வைக்கப்பட உள்ளது.
-

சிறப்புமிக்க இந்தத் திருப்பணி, தருமமிகு சென்னை சிவலோக திருமடத்தைச் சேர்ந்த பக்தர்களின் அர்ப்பணிப்புடன் வாதவூர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்தத் தங்க வில்வ மாலையை அனைவரும் தரிசித்து சிவபுண்ணியம் ஈட்டும் வண்ணம் 25.12.19 அன்று காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை, சென்னை, அஷோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. இங்கு மாலைக்கு வில்வார்ச்சனையும் நடைபெறும். சிவ பக்தர்கள் அனைவரும் தங்களின் திருக்கரங்களினால் வில்வார்ச்சனை செய்த பின் வில்வ மாலை புனித யாத்திரை புறப்படும்.

வில்வ மாலை
வில்வ மாலை
`கி.பி 16 -ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாசல புராணம்!’- பழநியில் கண்டெடுக்கப்பட்ட பிரதி சுவடிகள்

இந்த யாத்திரை மணிவாசகப் பெருமான் திருவடி பதித்த தலங்கள் தோறும் சென்று வழிபாடு நடத்தப்பட்டு, முக்தித்தலமாம் தில்லையை 1.1.2020 அன்று சென்றடையும்.

திருவாசகத்தின் வாசகங்கள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை என்பர் சிவனடியார். அவர்களின் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளனர் இந்த அடியார்கள். சென்னை சிவலோகத் திருமடம் சார்பில் தில்லையில் சிறப்பாக நடைபெறும் வில்வ மாலை சாத்தும் இவ்விழாவை பக்தர்கள் வரும் ஆங்கிலப் புத்தாண்டன்று கண்டு தரிசிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு