Published:Updated:

நெல்லையப்பர் கோயில்: 100 வருடங்களுக்குப் பிறகு சந்தனாதி தைலம் தயாரிப்பு! இதன் சிறப்பு என்ன?

சந்தனாதி தைலம் தயாரிப்பு

சுயம்புவாகத் தோன்றிய நெல்லையப்பர் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சந்தனாதி தைலம் பூசுவது வழக்கம். கடந்த நூறு வருடங்களாக தைலம் தயாரிக்கும் பணி நடைபெறாத நிலையில், மூலிகைகள் மூலம் மீண்டும் தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

நெல்லையப்பர் கோயில்: 100 வருடங்களுக்குப் பிறகு சந்தனாதி தைலம் தயாரிப்பு! இதன் சிறப்பு என்ன?

சுயம்புவாகத் தோன்றிய நெல்லையப்பர் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சந்தனாதி தைலம் பூசுவது வழக்கம். கடந்த நூறு வருடங்களாக தைலம் தயாரிக்கும் பணி நடைபெறாத நிலையில், மூலிகைகள் மூலம் மீண்டும் தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
சந்தனாதி தைலம் தயாரிப்பு
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் சுவாமி கோயில் விளங்குகிறது. நெல்லையின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலின் மூலவரான நெல்லையப்பர் சுயம்புவாக உருவானவர். நெல்லையப்பர் கோயில், தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாகத் திகழ்கிறது.
நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

முன்பொரு காலத்தில், அரண்மனைக்குப் பால் கொண்டு சென்ற ராமகோன் என்பவர் கல் தடுக்கி விழுந்ததால் மன்னருக்குக் கொண்டு சென்ற பால் முழுமையாகக் கொட்டிவிட்டது. அடுத்தடுத்து பல நாள்களில் இது போல நிகழ்ந்ததால் அரண்மனைக் காவலர்களுடன் அந்த இடத்துக்குச் சென்ற மன்னன் கல்லை அகற்ற உத்தரவிட்டார். அதனால் கோடாரி கொண்டு அந்த கல்லை காவலர்கள் வெட்டியபோது நெல்லையப்பர் சுயம்புவாகத் தோன்றி காட்சியளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நெல்லையப்பரின் தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயம் இப்போதும் மூல விக்கிரகத்தில் இருக்கிறது. அந்தக் காயத்தால் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோயில் வழிபாட்டின்போது சந்தனாதி தைலத்தை நெல்லையப்பரின் மூல விக்கிரகத்திற்குப் பூசி அபிஷேகங்கள் நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நித்திய பூஜையில் நடைபெறும் அபிஷேகத்தின் போது சந்தனாதி தைலம் சாத்துவது நிறுத்தப்பட்டது.
மூலிகைகள் மூலம் தைலம் தயாரிப்பு
மூலிகைகள் மூலம் தைலம் தயாரிப்பு

கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அறநிலையத் துறை உயரதிகாரிகள் நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுவாமி நெல்லையப்பருக்கு சாத்தப்படும் சந்தனாதி தைலம் பல ஆண்டுகளாகச் சாத்தப்படாமல் பூஜைகள் நடந்து வருவது பற்றி பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன், மீண்டும் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, கோயிலில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தனாதி தைலம் தயாரிக்கும்பணி இன்று தொடங்கியது. சுவாமி சந்நிதியின் வெளிப்பிராகாரத்தில் சந்தனாதி தைலம் தயாரிப்பதற்கென பிரத்யேகமாக அறை உருவாக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயாரிப்பு
நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயாரிப்பு

அந்த அறையில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்புப் பாத்திரத்தில் 44 வகையான மூலிகைகள் மூலம் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மூலிகையையும் நன்றாகக் கொதிக்க வைத்து பின்னர் ஆறியதும் வேறு மூலிகைகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவைத்து மூலிகை தைலம் தயாரிக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். அதனால் இந்தப் பணிக்கு சுமார் எட்டு மாதங்கள் எடுக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

நெல்லையப்பர் கோயிலில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தனாதி தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு காரணங்களால் அந்தப் பணி நிறுத்தப்பட்டு வெளியிலிருந்து சந்தனாதி தைலம் வாங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தயாரிப்புப் பணி தொடங்கியிருப்பது நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism