Published:Updated:

சமயபுரம்: 7 கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா; குதிரை வாகனத்தில் ஏழு ஊர் பவனி வரும் ஸ்ரீ அய்யாளம்மன்!

ஸ்ரீஅய்யாளம்மன்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா நடந்தாலும், எங்கெங்கு வாழ்ந்தாலும் தங்கள் சொந்த கிராமத்தைத் தேடி வந்து விடுகின்றனர் இந்த கிராமத்துவாசிகள். வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இவ்வூரைச் சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவிற்குத் தவறாமல் வந்து விடுகின்றனர்.

சமயபுரம்: 7 கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா; குதிரை வாகனத்தில் ஏழு ஊர் பவனி வரும் ஸ்ரீ அய்யாளம்மன்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா நடந்தாலும், எங்கெங்கு வாழ்ந்தாலும் தங்கள் சொந்த கிராமத்தைத் தேடி வந்து விடுகின்றனர் இந்த கிராமத்துவாசிகள். வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இவ்வூரைச் சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவிற்குத் தவறாமல் வந்து விடுகின்றனர்.

Published:Updated:
ஸ்ரீஅய்யாளம்மன்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஅய்யாளம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவையாறு ஐயாறப்பர் கோயில் மற்றும் அதனைச் சுற்றி இருக்கக்கூடிய 6 கோயில்கள் சேர்ந்து 'சப்தஸ்தான திருவிழா' என்ற பிரசித்தி பெற்ற விழா நடக்கும். இவ்விழாவின் போது, ஏழு ஊர் சுவாமிகளும் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவர். இதேபோலத்தான் இந்த விழாவும் நடக்கிறது. ஆனால், ஏழு ஊர்களுக்கும் இந்த ஓர் அம்மனே, பல்லாக்குக் குதிரையிலே பவனி சென்று வருகிறாள்.

ஸ்ரீஅய்யாளம்மன்
ஸ்ரீஅய்யாளம்மன்

மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள 7 கிராம மக்கள் ஒன்று கூடி இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இனாம் சமயபுரத்தில் இக்கோயில் இருந்தாலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 கிராமங்களுக்கும் இவளே காவல் தெய்வம். இவளே இந்த மக்களை நோய்கள் இன்றிக் காத்து அருள் செய்பவள்; விவசாயத்தை செழிக்கச் செய்பவள்; அவர்களின் வாழ்வுக்கு ஜீவாதாரமாக விளங்குபவள். எனவே, ஸ்ரீ அய்யாளம்மனை மிகுந்த பயபக்தியோடு கொண்டாடி வழிபடுகிறார்கள் ஏழு கிராம மக்களும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விழா நடந்தாலும், எங்கெங்கு வாழ்ந்தாலும் தங்கள் சொந்த கிராமத்தை தேடி வந்து விடுகின்றனர் இந்த கிராமத்துவாசிகள். வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இவ்வூரைச் சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவிற்குத் தவறாமல் வந்து விடுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேலையே உடை; வீட்டுக்குச் செல்லத் தடை!

இந்த ஆண்டு திருவிழா வைகாசி மாத, இரண்டாம் செவ்வாய்க்கிழமை (மே 24), பனையடி கருப்பசாமிக்கு 'முக்காவு பூஜை'யுடன் தொடங்கியது. மறுநாள் காலையில் கருப்பண்ணசாமி பூஜையும், அன்று இரவு காப்பு கட்டும் சடங்கும் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து அம்மனுக்கு தினமும் மூன்று வேளையும் அபிஷேக, ஆராதனைகளோடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதற்கு அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'மறு காப்பு கட்டுதல்' வைபவத்தில், கோயில் சார்பாக நான்கு பிரதிநிதிகளுக்குக் காப்பு கட்டப்பட்டது. கோயில் பூசாரி, அம்பாளுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் கிடாய்கள் வெட்டுபவர், காணியாளர் மற்றும் விழாவிற்கான மேளம் இசைப்பவர் ஆகிய 4 பேருக்கும் இந்தக் காப்பு கட்டப்பட்டது. இவர்கள் நால்வரும் விழா முடியும்வரையிலும் கடும் விரதம் இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் இவர்கள் அம்பாளின் ஆடையான சேலையைத்தான் ஆடையின் ஒரு அங்கமாக அணிந்து கொள்ள வேண்டும். விழா முழுவதுமாக முடிந்தபின் தான், அந்த ஆடையைக் களைய வேண்டும் என்பது காலம் காலமாக இவர்கள் பின்பற்றிவரும் நியதி.

சமயபுரம்: 7 கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா; குதிரை வாகனத்தில் ஏழு ஊர் பவனி வரும் ஸ்ரீ அய்யாளம்மன்!

தவிர, இந்நாள்களில் இவர்கள் யாரும் தங்களின் வீடுகளுக்கும் செல்வது கிடையாது. ஏழு நாள்களும் அம்பாள் எங்கெங்கு உலா செல்கிறாரோ, அங்கெல்லாம் இவர்களும் செல்ல வேண்டும். அம்பாள் இருக்கும் இடத்திலேயே இவர்கள் தங்கிக் கொள்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7 கிராம பவனி

விழாவின் முக்கிய நிகழ்வாக, இனாம் சமயபுரத்தில் இருந்து குதிரை வாகனத்தில் கிளம்பிய ஸ்ரீஅய்யாளம்மன், சமயபுரம் புதூர், பூசாரி கொட்டம், இனாம் கல்பாளையம், வடக்கு ஈச்சம்பட்டி, மேல ஈச்சம்பட்டி, ராசாம்பாளையம் மற்றும் எடையபட்டி ஆகிய ஏழு கிராமங்களுக்கும் உலா சென்றாள். மண்ணச்சநல்லூர் தாலுகாவில் கிட்டத்தட்ட 15 கி. மீ சுற்றளவில் அமைந்த கிராமங்கள் இவை. தங்களுக்கு அருள்பாலிக்க தங்களது கிராமத்திற்கு நேரடியாக வந்திருக்கும் ஸ்ரீஅய்யாளம்மனை, மனமுருகி வேண்டி வழிபட்டு வரவேற்கிறார்கள் கிராம மக்கள். ஏழு கிராமங்களிலும் அம்மனுக்கு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யத் தனியே மண்டபங்களும் உள்ளன. அங்குதான் இரவில் அம்பிகையும் தங்குகிறாள்.

ஏழு கிராமங்களுக்குச்  செல்லும்போதும், வழி நெடுகிலும் ஒவ்வொரு வீதியாகச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தனது அருளை வாரி வழங்குகிறாள் ஸ்ரீ அய்யாளம்மன். அப்போது பக்தர்கள் இவளுக்கு மாவிளக்கு எடுத்தும், தேங்காய், பழம் படைப்பது பூஜைகள் செய்தும் வழிபடுகின்றனர்.

சமயபுரம்: 7 கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா; குதிரை வாகனத்தில் ஏழு ஊர் பவனி வரும் ஸ்ரீ அய்யாளம்மன்!

தவிர, கிடா நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. ஆட்டுக்கிடா நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அதனைக் கோயிலிலோ அல்லது ஏதேனும் பொது இடத்திலேயோ பலி கொடுப்பது இல்லை! தங்களின் வீட்டின் முன்பாகவே அதனை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். அதாவது, வீதி உலா செல்லும் அம்பாள் தங்கள் வீட்டுக்கு முன்பாக வரும் போது, அவளது உத்தரவு கேட்டு ஆட்டு கிடாய்களை பலி கொடுக்கின்றனர். சில பக்தர்கள் 5,6,7 என்ற எண்ணிக்கையிலும் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் மற்றும் வேண்டுதல் நிறைவேறிய விஷயங்களைப் பொறுத்து இதன் எண்ணிக்கை கூடும். ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தது 50 முதல் 100 கிடாய்கள்வரை இவ்வாறு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுகிறது.

ஏழு கிராமங்களுக்கும் ஸ்ரீஅய்யாளம்மன் சென்று வந்த பிறகு 'படுகள பூஜை' மற்றும் 'சரம் குத்துதல்' வைபவம் நடக்கிறது. நாளை (ஜூன் 10 - ம் தேதி) வெள்ளிக்கிழமை தேரில் எழுந்தருளி புதூர், பூசாரி கொட்டம் சென்றுவிட்டு இரவில் புதூரில் தங்குகிறாள். அதற்கு மறுநாள், 11- ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. பின்னர், அம்பிகை தனது இருப்பிடமான சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்திற்குத் திரும்புகிறாள்.

ஸ்ரீஅய்யாளம்மன் உற்சவர் விக்கிரகம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில்தான் பாதுகாக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி விழா தொடங்குவதற்கு முன்பாக கோயிலிலிருந்து கிளம்பி வரும் உற்சவர் அம்மன், ஏழு ஊர்களுக்கும் சென்று திரும்பி, மீண்டும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்வதோடு விழா நிறைவு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism