Published:Updated:

அதிர்ந்த `ரெங்கா’, `கோவிந்தா’ கோஷம் - வெகுவிமர்சையாக நடந்தேறிய ஸ்ரீரங்கம் தேரோட்டோம்!

ஸ்ரீரங்கம் தேரோட்டம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிர்ந்த `ரெங்கா’, `கோவிந்தா’ கோஷம் - வெகுவிமர்சையாக நடந்தேறிய ஸ்ரீரங்கம் தேரோட்டோம்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீரங்கம் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Published:Updated:
ஸ்ரீரங்கம் தேரோட்டம்

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இம்மாதம் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு, ஸ்ரீரங்கம் பகுதியில் மின் தடையும் செய்யப்பட்டது. திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையையை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு மனைவியானதால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோியிலுக்கும் இடையே மங்கலப் பொருள்கள் பரிவர்த்தனை நடைபெறும். அந்த வகையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மலர்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்களை அணிந்தே இன்றைய தேரோட்டத்தில் நம்பெருமாள் பக்தர்களிடையே உலா வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஸ்ரீரங்கம் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் தேரோட்டம்

சரியாக காலை 6 மணியளவில் உற்சவர் நம்பெருமாள் தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று 6.30 மணியளவில் திருத்தேர் உலா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேட்டுகள் வெடிக்க, மேளதாளம் இசைக்க, பக்தர்களின் பரவசக் கூச்சலால் நம்பெருமாள் திருத்தேரில் பவனி வந்தார். அப்போது ‘ரெங்கா’... ‘கோவிந்தா’ என்னும் கோஷம் அதிர்ந்தது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கீழச் சித்திரை வீதியிலிருந்து தேர் புறப்பட்டு தெற்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி மற்றும் வடக்குச் சித்திரை வீதிகளில் வலம் வந்ததது. வழிநெடுக ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் ஆகியன சிறப்பாக வழங்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism