Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருக்கல்யாணம் நிகழ்ச்சி கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 18-ம் தேதி நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 18-ம் தேதி நடக்கிறது.

Published:Updated:
திருக்கல்யாணம் நிகழ்ச்சி கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று. மார்கழி மாதம் ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவமும், பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் இங்கு வெகுவிமர்சையாக நடைபெறும். எண்ணெய்க்காப்பு உற்சவத்துக்காக 61 வகை மூலிகைளைப் பயன்படுத்தி தைலம் காய்ச்சப்படும்.

திருக்கல்யாணம் நிகழ்ச்சி கொடியேற்றம்
திருக்கல்யாணம் நிகழ்ச்சி கொடியேற்றம்

நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர், நறுமணப்பொருள்கள் முதலான பல பொருள்களை இடுபொருளாக்கி 7 படி எண்ணெய்விட்டு இரண்டு பேர் சேர்ந்து 40 நாள்கள் தைலம் காய்ச்சுவர். இதில் மொத்தமாக 4 படி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவம் நடக்கும் 8 நாள்களும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர், மார்கழி மாதம் முடிந்ததும் இந்த தைலம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டாள்-ரங்கமன்னார்
ஆண்டாள்-ரங்கமன்னார்

அதுபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சியும் ஒன்று. இந்த ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாணம் வருகிற மார்ச் 18 - ம் தேதி நடக்கிறது. கொரனோ பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருக்கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. தற்போது கொரோனா விதிமுறைகள் தமிழக அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து கோயிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருக்கல்யாணம் நிகழ்ச்சிக் கொடியேற்றம்
திருக்கல்யாணம் நிகழ்ச்சிக் கொடியேற்றம்

விழா தொடக்கமாக நேற்று மாலை ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு அங்குரார்ப்பணம் நிகழ்த்தப்பட்டது. இதில் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் - ரங்கமன்னார் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். தொடர்ந்து, இன்று காலை 9.30 மணிக்கு கோயிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்காக கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து, விழா நாள்களில் தினமும் ஆண்டாள் - ரங்கமன்னார் பல்வேறு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நடைபெறும் மார்ச் 18-ம் தேதி காலையில் செப்பு தேரோட்டமும், மாலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism