Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் எண்ணெய்க் காப்பு உற்சவம்: கள்ளழகர் கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டாள்!

ஆண்டாள் கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்சவ விழாவில் எண்ணெய்க் காப்பு உற்சவம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் எண்ணெய்க் காப்பு உற்சவம்: கள்ளழகர் கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்சவ விழாவில் எண்ணெய்க் காப்பு உற்சவம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Published:Updated:
ஆண்டாள் கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம் கடந்த மாதம் 23-ம் தேதி பச்சைப் பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான எண்ணெய்க் காப்பு உற்சவம் நேற்று தொடங்கியது.

நேற்று காலை ஶ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கில் மாட வீதி, பெரிய பெருமாள் மேல மாடவீதி, காந்தாடை வீதி வழியாக எழுந்தருளி கோபுர வாசலில் போர்வைப் படிகளைக் களைந்து திருவடி விளக்கம் அளிக்கப்பட்டது. அரையர் நாள்பாட்டு திருக்கோஷ்டிக்குப் பின் திருமுக்கக் குளக்கரையில் உள்ள நீராட்டு மண்டபத்தில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெற்றது.

ஆண்டாள் ரெங்கமன்னார்
ஆண்டாள் ரெங்கமன்னார்

எட்டு நாள்கள் நடைபெறும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தில் முதல் நாள் ஆண்டாள் கோலத்திலும், 2-ம் நாள் ஶ்ரீகள்ளழகர் திருக்கோலம், 3-ம் நாள் ஸ்ரீ கண்ணன் திருக்கோலம், 4-ம் நாள் முத்தங்கி சேவை, 5-ம் நாள் பெரிய பெருமாள் திருக்கோலம், 6-ம் நாள் சவுரித் திருமஞ்சனம் மூக்குத்தி சேவை, 7-ம் நாள் தங்கக் கவசம், எட்டாம் நாள் மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன.

இன்று (ஜனவரி 9) இரண்டாம் நாள் உற்சவத்தில் ஸ்ரீஆண்டாள், கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவில் ஸ்ரீஆண்டாள் எண்ணொய் காப்பு உற்சவம் முடிந்து சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.