Published:Updated:

"தி.மு.க.வோடு இருக்கும் சில கரும்புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது!"- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

சடகோப ராமானுஜ ஜீயர்

தி.மு.க.வோடு இருக்கும் சில கரும்புள்ளிகளால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

"தி.மு.க.வோடு இருக்கும் சில கரும்புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது!"- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

தி.மு.க.வோடு இருக்கும் சில கரும்புள்ளிகளால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Published:Updated:
சடகோப ராமானுஜ ஜீயர்

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, "தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் செய்ய அரசு தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும், மடாதிபதிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் தலையிட்டு இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது எனச்சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. பட்டினப்பிரவேசம் சம்பந்தமாக ஆதீனங்கள், மடாதிபதிகள் அனைவரும் முதல்வரைச் சந்தித்து பேச உள்ளோம்.

தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க.வோடு இருக்கும் கரும்புள்ளிகளால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. இதுபோன்று ஆன்மிக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்குக் கெட்ட பெயர் உண்டாகி வருகிறது.

சடகோப ராமானுஜ ஜீயர்
சடகோப ராமானுஜ ஜீயர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். குருவைத்தூக்கிக் கொண்டாடும் விஷயம் இது. இதில் யாரும் தலையிடக்கூடாது. கண்டிப்பாகப் பட்டினப்பிரவேசத்தை நடத்தியே தீருவோம். செண்டலங்கார ஜீயர் அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனத்துக்குக் கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தமிழக அரசுக்குத் தெரிவித்துப் பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும்.

போட்டியிலோ, தேர்தலிலோ வெற்றிப்பெற்ற வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில்லையா? அதுமாதிரிதான் இது. மத விவகாரங்களில் இதைச்செய் என்றும், அதைச்செய்யக்கூடாது என்றும் யாரும் தலையிட்டுச்சொல்ல உரிமை கிடையாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism