Published:Updated:

திருப்பதி : பக்தர்கள் இனி கூண்டில் நாள்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; மீண்டும் வந்தது SSD முறை!

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 30 கௌண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸ், ஸ்ரீநிவாசம் காம்பிளக்ஸ் மற்றும் ஐ.ஐ.என்.சி (IINC) ஆகிய இடங்களில் இந்த டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பதி : பக்தர்கள் இனி கூண்டில் நாள்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; மீண்டும் வந்தது SSD முறை!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 30 கௌண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸ், ஸ்ரீநிவாசம் காம்பிளக்ஸ் மற்றும் ஐ.ஐ.என்.சி (IINC) ஆகிய இடங்களில் இந்த டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Published:Updated:
திருமலை திருப்பதி
திருமலை திருப்பதியில் சமீப காலமாக பக்தர்கள் தரிசனத்துக்காக நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இதைத் தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் நேரம் குறிக்கப்பட்ட ‘ஸ்லாட்டட் சர்வ தரிசனம்’ எனப்படும் நேரம் குறிக்கப்பட்ட நேரத்தில் தரிசனம் செய்யும் எஸ்.எஸ்.டி முறையை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகளால் ஒராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச சர்வ தரிசன முறையை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் திருமலை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 12 - ம் தேதி நேரம் குறிக்கப்பட்ட சர்வ தரிசனம் முறை தொடங்கப்பட்டது ஆனால் அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 க்கும் அதிகமான பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் திருமலை தேவஸ்தானம் இந்த முறையைக் கைவிட்டு சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் முறையை அமல்படுத்தியது.

SSD முறை
SSD முறை

இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக வார இறுதி நாள்கள் மற்றும் விழா நாள்களில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 5 கி. மீக்கும் மேல் வரிசை நீண்டது. இவற்றைத் தவிர்க்க மீண்டும் எஸ்.எஸ்.டி முறையை அமல்படுத்துவதே தீர்வு என்று பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் (1.11.22) மீண்டும் அந்த சேவையைத் தொடங்கியது.

இனி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நேரங்களைத் தெரிந்துகொண்டு அதில் தங்களுக்கு வசதியான நேரத்தைக் குறித்து அதற்கென டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். பிறகு குறித்த நேரத்துக்கு முன்பாக வைகுண்டம் கியூ காம்பிளக்ஸில் வந்து சேர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தரிசனம் செய்யக் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறையும்.

இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 30 கௌண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸ், ஸ்ரீநிவாசம் காம்பிளக்ஸ் மற்றும் ஐ.ஐ.என்.சி (IINC) ஆகிய இடங்களில் இந்த டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்
திருமலை திருப்பதி வேங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார்

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் பார்வையிட்டு உறுதி செய்தனர்.நேற்று முதல் பக்தர்கள் இந்த முறையிலேயே தரிசனம் செய்துவருகிறார்கள். தினமும் 15,000 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். வார இறுதி நாள்கள் மற்றும் திங்கட்கிழமைகளில் 25,000 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இந்த தரிசன டோக்கன்களைப் பெற ஆதார் அட்டை அவசியம்.

சர்வ தரிசனம் மூலம் வரும் பக்தர்களுக்குத் தாமதம் இல்லாமல் தரிசனம் வழங்கும்பொருட்டு விரைவில் விஐபி தரிசன முறையிலும் சில மாற்றங்களை தேவஸ்தானம் செய்ய இருக்கிறது.