Published:Updated:

அதிகரிக்கும் காற்றுமாசு - வாரணாசியில் சாமி சிலைகளுக்கும் முகக் கவசம்!

வாரணாசியில் உள்ள கோயில் ஒன்றில் விக்ரகங்களுக்குக் காற்று மாசிலிருந்து பாதுகாக்கும் முகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசத்துடன் விக்ரகம்
முகக் கவசத்துடன் விக்ரகம் ( twitter//vjpriyaj )

டெல்லி உள்ளிட்ட வடபகுதி முழுவதும் காற்று மாசுபாட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறது. காற்று மாசுபாட்டுக்கான குறியீடு 400 புள்ளிக்கும் அதிகமாக உள்ளதென புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிகளிலுள்ள அனைவரும் முகக் கவசத்தோடுதான் வெளியில் நடமாடுகின்றனர்.

காற்று மாசு
காற்று மாசு
`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

மாசுபாட்டினால் பலருக்கு மூச்சுத் திணறலும், சுவாசக் கோளாறும், நுரையீரல் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தாண்டும் மாசுபாடு தீவிரமடைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். தீபாவளியைத் தொடர்ந்து மாசுபாடு இன்னும் கூடுதலாகி இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வாரணாசி சிவன் கோயில் ஒன்றில் தெய்வச் சிலைகள் எல்லாவற்றிற்கும் முகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் சிக்ரா என்ற பகுதி உள்ளது. அங்கே சிவாலயம் ஒன்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டினால் தெய்வங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது எனும் நோக்கில் சிலைகள் அனைத்திற்கும் வெள்ளை, கறுப்பு நிறங்களில் முகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான், துர்கையம்மன், காளியம்மன், சாயி பாபா ஆகிய விக்ரகங்கள் முகக் கவசங்களுடன் காட்சி தருகின்றன.

`காற்று மாசுபாட்டைத் தடுக்க யாகம்!' - உ.பி அமைச்சர் யோசனை
முகக் கவசத்துடன் விக்ரகம்
முகக் கவசத்துடன் விக்ரகம்
twitter//vjpriyaj

இதுகுறித்து அந்த சிவாலயத்தின் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, ``குளிர் காலங்களில் விக்ரகங்களை போர்வை போர்த்திக் காப்போம். அது போலவே காற்றுமாசு ஏற்பட்டு இருக்கிற இந்தக் காலத்தில் கடவுளருக்கு முகக் கவசம் அணிவித்திருக்கிறோம்" என்றார்.

மேலும் அவர், "இங்கு வந்து வழிபடும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் அனைவரும் காற்று மாசு குறித்து விழிப்புணர்வு அடைந்து முகக் கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.