Published:Updated:

தோரணமலை மகா ஸ்கந்த ஹோமம்: ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!

தோரணமலை
News
தோரணமலை

இந்த தைப்பூச விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை. வாரணம் போன்று (யானை) அமைந்துள்ள இந்த மலையே, பொதிகை மலைகளின் தோரண வாயிலாக அமைந்தும் உள்ளதால் தோரண மலை என்றும், அகத்தியர் வாழ்ந்து பல மருந்துகளை கண்டறியக் காரணமாக இருந்ததால் காரண மலை என்றும், முருகப்பெருமான் தோன்றி பல சித்தர்களுக்கு ஞானம் அளித்ததால் பூரண மலை என்றும் போற்றப்படுகிறது.

அகத்தியருக்குப் பிறகு அவரின் சீடரான தேரையர் 700 ஆண்டுகள் இங்கு வாழ்ந்து, மலை மீதுள்ள முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெற்றுள்ளார். அவர் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளார் என்கிறார்கள். மகிமைகள்மிகு தோரணமலைக்கு ராமபிரான் வந்து அகத்தியரை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி 'குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை அழகனைத்தான் என்கிறார்கள்.

தோரணமலை
தோரணமலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோரணமலை முழுவதிலும் சுமார் 64 சுனைகள் இருக்கின்றன. அடிவாரத்திலேயே இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. இந்தச் சுனைகளில் நீராடினால் சரும நோய்கள் நீங்குவதுடன், பல வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல, கடும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த ஜீவ சுனைகளில், ஒவ்வொரு சுனையின் நீரும் ஒவ்வொரு சுவையுடன், மருத்துவக்குணமும் கொண்டிருப்பது இயற்கையின் அற்புதம்!

தோரண மலையின் மேல் அமைந்துள்ள குகைப் பெருமான், கிழக்கு திசையிலுள்ள திருச்செந்தூர் முருகப் பெருமானை நோக்கியபடி காட்சி தருகிறார். இவரை வழிபட்டால், திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 926 படிகள் தாண்டி நெடிய மலைமீது ஏறி இவரை தரிசிக்கலாம். வழியெங்கும் மூலிகை வாசம், இனிய சுனைகள் என்று தோரணமலையே அழகிய குறிஞ்சி நிலமாக விரிந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒருவேளை நெடிது உயர்ந்த மலைமேல் இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க மேலே செல்ல முடியாதவர்களுக்காக, மலையடிவாரத்திலும் முருகப் பெருமானுக்கு ஓர் ஆலயம் உள்ளது. மேலும் ஸ்ரீ வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் போன்ற பரிவார தெய்வங்களும் உள்ளனர். வருடம்தோறும் இங்கு சித்திரை முதல்நாள், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.ஞானிகளும் சித்தர்களும் போற்றிய இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்பார்கள்.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

இந்த ஆண்டும் தைப்பூச நன்னாளான ஜனவரி-18 ம் தேதி (2022) இந்த ஆலயத்தில் தைப்பூச விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, மகாஸ்கந்த ஹோமம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் விசேஷமாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளது.

இந்த தைப்பூச விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும்இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. நவ கோள்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். இதனால் செவ்வாயால் உண்டாகும் வீண் செலவு, விரயம், தேவையற்ற அலைச்சல்கள், அவமானங்கள், வீண் சண்டைகள், சகோதர உறவில் சிக்கல் யாவும் தீரும் எனலாம். முருகனை வழிபட்டால் செவ்வாயை ப்ரீத்தி செய்ததாக மாறும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். முருகனை வழிபட உறவுகள் சந்தோசமாகும், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும், வந்த வினைகளும் வரப்போகும் வினைகளும் விலகியோடும் என்கின்றன ஆன்மிக நூல்கள். எனவே எதிர்த்த தீயவருக்கும் அருள் புரிந்த ஞான தெய்வம் முருகன். எனவே தோரணமலை வள்ளல் எல்லோருக்கும் நலமே அளிப்பான் என்று நம்பி, இந்த மகா ஸ்கந்த ஹோமத்தில் பங்கு கொள்வோம்! நலமும் வளமும் பெறுவோம்.

தோரணமலை வள்ளல்
தோரணமலை வள்ளல்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.