Published:Updated:

தை அமாவாசை... பூம்புகார் சங்கமுகதீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்துப் புனித நீராடினர்!

தை அமாவாசை
தை அமாவாசை

காவிரி ஆறு கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டுச் சடங்குகளைச் செய்தனர்.

தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்குப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது என்பது ஐதிகம்.
தை அமாவாசை
தை அமாவாசை

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டுச் சடங்குகளைச் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூம்புகார் வந்து தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

பூம்புகாரில் தர்ப்பண பூஜைகள் செய்து வரும் புரோகிதர், "குழந்தையை, தாய் 10 மாதங்கள் சுமந்து பெறுகிறாள். ஆன்மசக்தி தருவது தந்தை. அப்படிப்பட்ட தந்தை தாய்க்குத் திதி கொடுக்க இந்த தை அமாவாசை மிகவும் உகந்தது. இறந்தவர்கள், இந்த அமாவாசை தினங்களில் தங்களுக்கு யாராவது நினைத்து நீர் வார்க்க மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது நாம் திதி கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சியடையும். இதன் மூலம் பித்ரு பூஜை செய்பவரின் குடும்பத்தில் வளமைகள் பெருகும்; வம்சவிருத்தி ஏற்படும்; சகல வசதிகளும் உண்டாகும்" என்றார்.

பூம்புகார் தை அமாவாசை
பூம்புகார் தை அமாவாசை
முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களை மறந்துவிடாமல் இத்தகைய தர்ப்பண பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் தங்களின் குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டு முன்னோர்களை வழிபட்டு மகிழ்ந்தனர்.
அடுத்த கட்டுரைக்கு