Published:Updated:

தஞ்சாவூர்: 50 டன் கொண்ட ஒரே கல்லில் யானை, குதிரைச் சிலைகள்... கவனம் ஈர்த்த ஐயனார் கோயில் விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்லில் செய்யப்பட்ட யானை, குதிரைச் சிலைகள்
கல்லில் செய்யப்பட்ட யானை, குதிரைச் சிலைகள்

கோயில் முகப்பில் வைப்பதற்காக ரூ.27 லட்சம் மதிப்பில், 50 டன் எடை கொண்ட ஒரே கல்லின் மூலம் 23 டன் எடை கொண்ட யானைச் சிலை, 11 அடி உயரம், 13 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஐயனார் கோயில் ஒன்றிற்காக மொத்தம் 35 டன் எடையில் கருங்கல்லில் யானை, குதிரைச் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அப்போது பக்தர்கள் திரளாகத் திரண்டு 'ஐயனாரே' என கோஷங்கள் முழங்க வழிபட்டனர்.
கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்ட யானைச் சிலை
கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்ட யானைச் சிலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது புதூர் கிராமம். அந்த ஊரில் அமைந்துள்ள யானைமேல் அழகர் என்ற ஐயனார் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. சுமார் 200 ஆண்டுப் பழைமையான அக்கோயிலை அப்பகுதியினர் தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டுவருகின்றனர். யானை மேல் அழகர் ஐயனார் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து கோயில் நிர்வாக கமிட்டி மற்றும் கிராம மக்கள் சார்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளைத் தொடங்கினர். திருப்பணிக்காக ரூ.29 லட்சம் அறநிலையத்துறை வழங்கியது. மேலும், பொதுமக்கள் சார்பிலும் நிதிதிரட்டப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கோயில் பணிகள் செய்ய முடிவுசெய்து அதன்படி பணிகள் தொடங்கி நடைபெற்றன.

திருச்சி ஹேங்கவுட்: உற்சாகக் குளியல், படகுக்குழாம், பூங்கா... முக்கொம்பிற்கு இத்தனை சிறப்புகளா?!

பழைமையான இக்கோயில் இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகக் கோயில் பணிகள் முழுவதும் கருங்கற்களைக் கொண்டு செய்யப்பட்டன. இதில் அமைக்கப்பட்டிருக்கும் 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலைநுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் மகா மண்டபத்தின் முகப்பில் இரு புறமும் கருங்கல்லிலேயே பிரமாண்ட யானை மற்றும் குதிரைச் சிலைகள் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் யானை, குதிரைச் சிலைகள் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.27 லட்சம் மதிப்பில், 50 டன் எடை கொண்ட ஒரே கல்லின் மூலம் 23 டன் எடை கொண்ட யானைச் சிலை, 11 அடி உயரம், 13 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

ஐயனார் கோயில்
ஐயனார் கோயில்

மேலும் 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 12 டன் எடை அளவில் குதிரைச் சிலை, 11 அடி உயரம், 13 அடி நீளத்தில் வடிமைக்கப்பட்டது. அத்துடன் கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், 4 அடி உயரத்தில் யானைப் பாகன் சிலையும் வடிவமைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் திருப்பூரிலிருந்து பெரிய லாரி மூலம் எடுத்துவரப்பட்டது. நேற்று சிலைகள் கோயிலை நெருங்க இருந்த நிலையில் பக்தர்கள் திரண்டு மேள தாளம் முழங்க வாண வேடிக்கை நடத்தி ஊர்வலமாகக் கோயிலுக்கு எடுத்து வந்தனர். வரும் வழியெங்கும் யானை, குதிரைச் சிலைகளுக்கு மலர் தூவி வழிபட்டனர்.

இதையடுத்து இன்று கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இரு சிலைகளும் பீடத்தில் பொறுத்தப்பட்டன. பின்னர் யானை, குதிரைச் சிலைகளுக்குப் பட்டுத் துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்திப் பரவசத்தில் 'ஐயனாரே' என கோஷங்கள் முழங்க வழிபட்டனர்.

கற்சிலைகள்
கற்சிலைகள்

இது குறித்துக் கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், "பழைமையான இக்கோயில் இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக் கூடிய வகையில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினோம். இன்றைக்குச் சிறப்பு மிக்க பிரமாண்ட யானை, குதிரைச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது கோயிலைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு