Published:Updated:

கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தொடங்கிய சிவாலய ஓட்டம்... குமரியின் பிரசித்திபெற்ற சிவராத்திரி நிகழ்வு!

திருமலை மஹாதேவர் கோயிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம்

12 சிவாலயங்களுக்கும் செல்ல சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இன்று இரவு, சிவராத்திரி தினமான நாளை பகல்பொழுது, நாளை இரவு என இந்த 12 சிவாலயங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தொடங்கிய சிவாலய ஓட்டம்... குமரியின் பிரசித்திபெற்ற சிவராத்திரி நிகழ்வு!

12 சிவாலயங்களுக்கும் செல்ல சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இன்று இரவு, சிவராத்திரி தினமான நாளை பகல்பொழுது, நாளை இரவு என இந்த 12 சிவாலயங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

Published:Updated:
திருமலை மஹாதேவர் கோயிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம்
சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 'சிவாலய ஓட்டம்' தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு கால்நடையாகவும், பைக், கார் போன்ற வாகனங்களிலும் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சிவாலயங்களுக்கு வரிசைப்படி சென்று வழிபடுவதை 'சிவாலய ஓட்டம்' என அழைக்கிறார்கள்.
விசிறியுடன் செல்லும் பக்தர்கள்
விசிறியுடன் செல்லும் பக்தர்கள்

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக 'கோவிந்தா... கோபாலா...' என்ற கோஷம் முழங்க பக்தர்கள் பன்னிரண்டு சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்சிறை பகுதியில் அமைந்துள்ள திருமலை சிவன் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். கடைசி திருத்தலமான திருநட்டாலத்தில் சிவபெருமானை வழிபடும் பக்தர்கள் அருகில் அமைந்துள்ள சங்கரநாராயணர் விஷ்ணு கோயிலில் வழிபட்டு சிவாலய ஓட்டத்தை நிறைவுசெய்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள் இன்று மாலை முதல் சிவாலய ஓட்டத்தைத் தொடங்கிவிட்டனர். 12 சிவாலயங்களுக்கும் செல்ல சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இன்று இரவு, சிவராத்திரி தினமான நாளை பகல்பொழுது, நாளை இரவு என இந்த 12 சிவாலயங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்துகொள்கிறார்கள்.

சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்கள்
சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்கள்
File Photo

சிவாலய ஓட்டத்துக்குச் செல்லும் பக்தர்கள் காவி வேஷ்டி, காவித் துண்டு அணிந்து செல்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கோயிலில் இருந்தும் பக்தர்கள் விபூதி சேகரித்துப் பிரசாதமாக வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அதுபோல கையில் ஒரு விசிறியை வைத்து ஒவ்வொரு கோயிலில் உள்ள சிவன் மூலவருக்கும் பக்தர்கள் விசிறிவிடுகிறார்கள். 12 சிவாலயங்களும் இந்துசமய அறநிலையத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் கீழ் வருகிறது. சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் நிர்வாகம் செய்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism