Published:Updated:

தேனி: தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோயில் திருவிழா தொடக்கம்!

அம்மன்

திருவிழாவின் முக்கிய நிகழ்வு இன்று தொடங்கினாலும் கம்பம் நடும் நிகழ்வு நடந்தது முதல் தேனி மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

தேனி: தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோயில் திருவிழா தொடக்கம்!

திருவிழாவின் முக்கிய நிகழ்வு இன்று தொடங்கினாலும் கம்பம் நடும் நிகழ்வு நடந்தது முதல் தேனி மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

Published:Updated:
அம்மன்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சித்திரைத் திருவிழா ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீரபாண்டி கோயில் திருவிழா நேர்த்திக்கடன்
வீரபாண்டி கோயில் திருவிழா நேர்த்திக்கடன்

திருவிழாவின் முதல் நிகழ்வான கம்பம் ஊன்றுதலுக்கு வன்னிமரத்தில் வெட்டப்பட்ட மூன்று கிளைகள் கொண்ட சிவ அம்சமாக உள்ள கொடிமரத்திற்கு முல்லைப் பெரியாற்றங்கரையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கொடிக் கம்பம் திருக்கோயிலின் மூலஸ்தனத்திற்கு முன்பாக உள்ள கம்பம் ஊன்றப்படும் மேடையில் ஊன்றப்பட்டது. முல்லைப் பெரியாற்றில் இருந்து அலங்கரித்து எடுத்து வரப்பட்ட கம்பத்திற்குத் தண்ணீரில் மஞ்சள் வேப்பிலை ஆகியவற்றைக் கலந்து ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீரபாண்டி கோயில் திருவிழா
வீரபாண்டி கோயில் திருவிழா
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கம்பம் நடப்படும் நிகழ்வைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்றுமுதல் தொடங்க உள்ளன. மே 10-ம் தேதி அம்மன் மலர் விமானத்தில் வருவதல், மே 11-ம் தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ம் தேதி புஷ்பப் பல்லக்கிலும் அம்மன் பவனி வரும் நிகழ்வு, மே 13 மற்றும் 16-ம் தேதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவாக மே 17-ம் தேதி அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கப்பட்டுத் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர்.

வீரபாண்டி கோயில் திருவிழா | தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள்
வீரபாண்டி கோயில் திருவிழா | தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள்

திருவிழாவின் முக்கிய நிகழ்வு இன்று தொடங்கினாலும் கம்பம் நடும் நிகழ்வு நடந்தது முதல் தேனி மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இன்று முதல் இரவு - பகலாகத் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றியும், தீச்சட்டி மற்றும் காவடி எடுத்தும், ஆயிரம் கண்பானை மற்றும் அங்கப்பிரதட்சனம் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் அம்மனை வழிபடத் தொடங்கியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism