Published:Updated:

ஹோமங்களில் முதன்மையான மகா ஸ்கந்த ஹோமம்... சக்தி விகடன் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்வது எப்படி?

மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

அசுர சக்திகளின் தொல்லைகள் நீங்க, தேவாதி தேவர்கள் அனைவரும் கூடிச் செய்த மகா ஹோமம் இது. இதன் பலனாகவே விண்ணுலகும் மண்ணுலகும் தீமைகள் நீங்கி நலம் பெற்றனவாம். கைமேல் பலன் தரக்கூடிய இந்த மகா ஸ்கந்த ஹோமம், அரிதினும் அரிதாக நடைபெறக் கூடியது.

முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம், மகிழ்ச்சி என்ற ஆறு தன்மைகளும் கொண்டவன் என்ற பொருளைத் தரும் என்கிறது தமிழ். தமிழும் முருகும் வெவ்வேறு அல்ல. முருகனை வழிபட்டால் சகலமும் கிடைக்கும். காரணம் முருகனே சகல தேவர்களுமாய் விளங்குபவன் என்கின்றன புராணங்கள். தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வணங்குகின்றோம். வேண்டிய பொருள்களையும் பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவன் என்பதால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன் முருகன்.
முருகன்
முருகன்

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கிறார் என்று கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. ஆணவம், மலம், மாயை எனப்படும் மூன்று மலங்களே அந்த அசுரர்கள். கந்தசஷ்டி திருநாளில் இந்த மூன்று தீய குணங்களை அழிக்கும் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. வேண்டியதை எல்லாம் அருளும் கந்தப்பெருமானின் முதலான வழிபாடு மகா ஸ்கந்த ஹோமம்.

மகா ஸ்கந்தஹோம மகிமைகள்

யாகங்களில் முதன்மையானது மகா ஸ்கந்த ஹோமம். அசுர சக்திகளின் தொல்லைகள் நீங்க, தேவாதி தேவர்கள் அனைவரும் கூடிச் செய்த மகா ஹோமம் இது. இதன் பலனாகவே விண்ணுலகும் மண்ணுலகும் தீமைகள் நீங்கி நலம் பெற்றனவாம். கைமேல் பலன் தரக்கூடிய இந்த மகா ஸ்கந்த ஹோமம், அரிதினும் அரிதாக நடைபெறக் கூடியது.

இந்த ஹோமத்தின் மூலம் எண்ணிய எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்; முருகனின் அருளால் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் தீயவினைகள், கொடும் வியாதிகள், தீராக் கடன்கள் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெறலாம். அதுமட்டுமா?

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

வீடு - மனை மற்றும் சொத்துப் பிரச்னைகள், தீராத பிணிகளால் கவலை, எதிரிகள் தொல்லை, தொழிலில் போட்டிகள், உத்தியோகத் தடைகள், குடும்பத்தில் குழப்பம் ஆகிய பிரச்னைகள் நீங்கவும், கல்யாண வரம், சந்ததி செழிப்பு, குடும்ப உறவுகளின் மேம்பாடு ஆகிய சகல பலன்களையும் பெறவும் அருள் வழங்கவல்லது மகா ஸ்கந்த ஹோமம்.

`மந்தம்’ எனும் சோம்பல் நீங்க `ஸ்கந்தம்’ எனும் திருமந்திரம் உதவும். எனவே ஒவ்வொருவரும் இந்த அற்புதமான மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்தித்து, காரிய ஸித்தி பெறுவது இந்தக் காலகட்டத்தில் மிக அவசியம் எனலாம்.

அந்த வகையில், முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி வைபவத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் மிக அற்புதமான மகா ஸ்கந்த ஹோமத்தை சக்தி விகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

பல்வேறு அபூர்வ மூலிகைப் பொருள்கள் கொண்டு மகா ஸ்கந்த ஹோமம் நடத்தப்படவுள்ளது. `ஆனந்த சொக்கவிநாயகர் உடனமர் கதிர்காம வேலவர்’ கோயிலின் வேத விற்பன்னர்கள் குழு கூடி வேதமந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தவுள்ளனர். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியானவர். எனவே இந்த ஹோமம் செவ்வாய்க்கிழமை அன்று செய்வது விசேஷமானது. அதிலும் கந்தசஷ்டி விரதம் நடைபெறும் 17.11.2020 அன்று நடைபெறுவது மிக மிக நல்லது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதால் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறலாம். உங்களது அனைத்துப் பணிகளிலும் வளர்ச்சியைக் காணலாம். இதுவரை எடுத்த காரியம் எல்லாம் தடைப்படுகிறதே என்று கவலை கொண்டோரெல்லாம் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறலாம்.

சூர சம்ஹாரம்
சூர சம்ஹாரம்
சக்தி விகடனும் திருப்பூரைச் சேர்ந்த குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவும் இணைந்து, திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள `ஆனந்த சொக்கவிநாயகர் உடனமர் கதிர்காம வேலவர்’ திருக்கோயிலில், 17.11.2020 செவ்வாய்க் கிழமை அன்று காலையில் 8:30 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது மகா ஸ்கந்த ஹோமம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்தது இந்தத் திருக்கோயில். கதிர்காமம் முருகன்மீது அதீத பக்தி கொண்ட அன்பரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. இங்கு அருள்பாலிக்கும் கதிர்காம வேலவன், தன்னை நாடிவந்து வழிபடும் பக்தர்கள் வேண்டும் வரங்களை வேண்டியபடி அருளும் வள்ளலாகத் திகழ்கிறார்.

ஆக, மிக அற்புதமான திருத்தலத்தில் நடைபெறும் அபூர்வமான மகா ஸ்கந்த ஹோமத்தில் வாசகர்கள் தங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் சங்கல்பம் செய்துகொண்டு பலன் அடையலாம்.

மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் ரூ.250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷமான மகா ஸ்கந்த ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), ஹோமம் முடிந்து ஒரு வார காலத்துக்குள் அதாவது 25.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும். தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்.

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404

நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு