Published:Updated:

"தியானத்தையும் அமைதியையும் பிரிக்க முடியாது!" அமைதி தின வேள்வியில் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் உரை

எஸ்.கே.எம்.மயிலானந்தன்

"தியானத்தையும், அமைதியையும் பிரிக்க முடியாது!"- ஈரோட்டில் அமைதி தின வேள்வியில் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உரை.

"தியானத்தையும் அமைதியையும் பிரிக்க முடியாது!" அமைதி தின வேள்வியில் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் உரை

"தியானத்தையும், அமைதியையும் பிரிக்க முடியாது!"- ஈரோட்டில் அமைதி தின வேள்வியில் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உரை.

Published:Updated:
எஸ்.கே.எம்.மயிலானந்தன்
ஈரோடு பெரியார் நகரில் உள்ள அறிவுத் திருக்கோயிலில், ஈரோடு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில், `உலக அமைதி தின வேள்வி' வைபவம் நடைபெற்றது. விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் கலந்துகொண்டு, வேள்வியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

"புத்தாண்டு அன்று நாம் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் மற்றவர்களின் குறைகளைப் பற்றிச் சிந்திக்காமல், நம்முடைய குறைகளைக் களைந்து, நம்மை நல்லொழுக்கம் மிகுந்தவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். `சுயநலம், வெறுப்பு, கோபம் போன்றவை இருக்கும் மனதில் அமைதி இருக்காது' என்று மகான்கள் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர். சிந்தனை என்ற ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஆகவேதான் திட்டமிட்டு தன்னை மேம்படுத்துவதற்கான தன்மை இறைவனால் மனிதக் குலத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

அமைதி தின வேள்வி
அமைதி தின வேள்வி

அன்புதான் ஆண்டவன். பூரண அமைதிதான் மோட்சத்துக்கு வழி. அந்த மனஅமைதியைப் பெறும் வழிமுறைகளை மனவளக்கலை மூலமாக வேதாத்திரி மகரிஷி நமக்காக வடிவமைத்துத் தந்துள்ளார். தன்னலமற்ற சேவை மூலமாகவே மனத்தூய்மை கிடைக்கிறது. நமக்குள் விருப்பு - வெறுப்புகள் நீங்கி ஒற்றுமை உணர்வு மேலோங்கவும் சிந்தனைத் திறன் செழிக்கவும் தியானம் துணை செய்யும். தியானத்தையும், அமைதியையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாது. நமக்கு எல்லாம் கொடுத்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்" என்றார் எஸ்.கே.எம்.மயிலானந்தன்.

முன்னதாக வேதாத்ரி பதிப்பக இயக்குநர் எம்.சதாசிவம் தவத்தைத் தொடங்கிவைத்தார். ஈரோடு மனவளக்கலை மன்ற செயலாளர் வி.எம்.வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் “வாழ்க வையகம், வாழ்க வளமுடன்” என்ற வாசகங்கள் ஒலிக்க, உலக அமைதி தின வேள்வி தொடங்கப்பட்டது.

மாலையில் நடந்த வேள்வியின் நிறைவு நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.பெருமாள் கலந்துகொண்டு “உலக அமைதியும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் பேசினார்.