Published:Updated:

மூன்று நதிகள் தாண்டிப் பயணம், பள்ளிவாசலில் மரியாதை, அரியநாச்சி வழிபாடு - பழைமை மாறாத கொடை விழா! 

சங்குமுகத் தீர்த்தம் - கொடை விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் நீர் காயல் கிராமத்தில், ஸ்ரீ பலவேசக்காரன் சுவாமி, ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா, வங்கக் கடலின் 'சங்குமுக தீர்த்தம்' எடுத்து சிறப்பாக அரங்கேறியது. 

மூன்று நதிகள் தாண்டிப் பயணம், பள்ளிவாசலில் மரியாதை, அரியநாச்சி வழிபாடு - பழைமை மாறாத கொடை விழா! 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் நீர் காயல் கிராமத்தில், ஸ்ரீ பலவேசக்காரன் சுவாமி, ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா, வங்கக் கடலின் 'சங்குமுக தீர்த்தம்' எடுத்து சிறப்பாக அரங்கேறியது. 

Published:Updated:
சங்குமுகத் தீர்த்தம் - கொடை விழா
மஞ்சள் நீர் காயலில் உள்ள ஸ்ரீ பலவேசக்காரன் சுவாமி, ஸ்ரீ சுடலைமாடன் சுவாமி கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பலருக்கும் குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் `கொடை விழா' சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, 'சங்குமுக தீர்த்தம்' எடுத்து வரும் வைபவம் நடந்தது. இதற்காக, மஞ்சள் நீர் காயலில் இருந்து கிளம்பிய பக்தர்களும் சாமியார்களும் மூன்று கிளைகளாக பிரிந்து ஓடும் தாமிரபரணியில் ஓடும் நீருக்கு நடுவிலேயே நீந்திச் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இதற்காக, கோயிலில் இருந்து கிளம்பி 7 கி.மீ தூரம் நடந்தே சென்று திரும்பினர்.

சங்குமுகத்தீர்த்தம் செல்லுதல்
சங்குமுகத்தீர்த்தம் செல்லுதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கு கடற்கரையில் உள்ள மணல் திட்டில் சூலம், பிரம்பு வைத்து கும்பத்தில் மாவிலை, வேப்பிலை வைத்து பூஜைகள் நடந்தன. பின், சங்குமுக தீர்த்தத்தில், நீராடி கும்பத்தில் தீர்த்தம் நிரப்பி, புடவை அணிவித்து அரியநாச்சி அம்பிகையை ஆவாஹனம் செய்யப்பட்டது. அந்தக் கலசத்திற்கு, அம்பிகை போல அலங்காரம் செய்து, அங்கிருந்து மேளதாளத்துடன் அம்பிகையை அழைத்துக்கொண்டு மீண்டும் வந்த வழியே திரும்பினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிவாசலில் மரியாதை

மஞ்சள் நீர் காயல் திரும்பும் வழியில் பழைய காயலில் உள்ள பள்ளிவாசலில் கும்பத்தில் ஆவாஹனம் செய்து அழைத்து வரப்படும் அரியநாச்சி அம்பிகைக்கு மரியாதை செய்யும் வைபவமும் நடைபெற்றது. அப்போது, சாமியாடிகள் பள்ளிவாசலுக்கு உள்ளே செல்ல, அங்கு பள்ளிவாசல் சார்பில் ஃபாத்தியா ஓதப்பட்டது. பள்ளிவாசலின் அசரத் மற்றும் நிர்வாகிகள் அவர்களுக்கு மரியாதையும் செய்தனர். மேலும், பள்ளிவாசல் சார்பில் புதிய வெள்ளைத் துணியில் வாழைப்பழம், வெல்லம், நாட்டுச் சர்க்கரை வைத்து வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அதனை வாங்கிக்கொண்ட சாமியாடிகள், பக்தர்களோடு கோயிலுக்குத் திரும்பினர். இந்த வழக்கம், மத நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அடையாளமாகக் காலங்காலமாகத் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

சுடலைமாடன்
சுடலைமாடன்

அவர்கள் கோயில் திரும்பிய பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள பலவேசக்காரன் சுவாமி, சுடலைமாடசுவாமி, தபசு தம்பிரான், பேச்சியம்மன், இசக்கியம்மன், சப்தகன்னியர் உள்ளிட்ட 21 தெய்வங்களுக்கும் பீடத்தில் கும்பம் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். பின்னர், நள்ளிரவில் சாமக்கொடை பூஜை நடந்தது. அப்போது சுவாமிக்கு சைவம் மற்றும் அசைவ உணவுப் படையல்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனையே பக்தர்களுக்கும் பிரசாதமாகக் கொடுத்தனர். அப்போது பக்தர்கள் சாமியாடிகளிடம் 'இறைவன் உத்தரவு' கேட்கும் வைபவமும் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஞ்சளுக்கு முக்கியத்துவம்

3 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் முதல் நாளில் அம்மனுக்கு 'மஞ்சள் காப்பு' சாத்தும் வைபவத்தோடு  விழா தொடங்கியது. விழா நிறைவு பெறும் மூன்றாவது நாளில், ஒரு பானையில் தண்ணீர் விட்டு அதில் மஞ்சளை சேர்த்துக் கொதிக்க செய்கின்றனர். இந்த அடுப்பில் தென்னை ஓலையை மட்டுமே வைத்து எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட பொங்கல் வைப்பது போலவே மஞ்சள் நீரைக் கொதிக்க விடுகின்றனர். சற்று நேரத்தில் மஞ்சள் கொதித்து, நுரை பொங்கி எழும். அந்த மஞ்சள் தீர்த்தத்தைத் தலையில் தெளித்து விழாவினை நிறைவு செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் மங்களகரமாக சுவாமியின் அருள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கொடை விழா
கொடை விழா
இவ்வாறு மஞ்சள் காப்பு துவங்கி, மஞ்சள் தீர்த்தத்தில் இந்த வைபவம் விழா நிறைவு பெறுகிறது. கொடைவிழா தவிர, இந்த ஊருக்கும் `மஞ்சள் நீர் காயல்' என்ற பெயர் உள்ளது இன்னுமொரு சிறப்பாகக் கருதப்படுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism