Published:Updated:

வீரபாண்டி கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா: பக்தி பரவசத்தில் தேனி மக்கள்!

வீரபாண்டி கெளமாரியம்மன்

வீரபாண்டி கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா: எட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சன்னதி தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

வீரபாண்டி கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா: பக்தி பரவசத்தில் தேனி மக்கள்!

வீரபாண்டி கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா: எட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சன்னதி தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

Published:Updated:
வீரபாண்டி கெளமாரியம்மன்
'நித்திரையில் இருக்கும் மனிதா சித்திரையில் விழித்தெழு' என்பார்கள். சித்திரை மாதம் என்றாலே தேனி மாவட்ட மக்களின் நினைவில் நிற்கும் தெய்வம் வீரபாண்டி கெளமாரியம்மன்.

சித்திரை முதல் நாளன்று இங்குள்ள முல்லைப் பெரியாற்றில் தீர்த்தம் எடுத்து தங்கள் வீட்டில் வைத்து அம்மனை வேண்டி வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றப்படுகிறது. கொடியேற்றிய 22வது நாளிலிருந்து எட்டு நாள்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த எட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சன்னதி தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

வீரபாண்டி கெளமாரியம்மன்.
வீரபாண்டி கெளமாரியம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்குக் கொடிக்கம்பமாக நடப்படும் அத்தி மரத்தினாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் (பானை) முல்லை ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றி அம்மனை வழிபடுகின்றனர். 21 நாள்களும் மாவு பூஜை மட்டுமே அம்மனுக்கு நடைபெறுகிறது. அம்மனுக்கு நெய் வேத்தியமாகக் காப்பு அரிசி மாவு மட்டும் படைக்கப்படுகிறது. எட்டு நாள்கள் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பக்தர்கள் அம்மனுக்கு தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். அக்னிச் சட்டி ஏந்தி அம்மனை வேண்டி, 'ஓம் சக்தி பராசக்தி' என கோஷம் முழங்க அம்மனை வழிபடுகின்றனர். ஆயிரம் கண் பானைகளை சுமந்து ஆயிரம் கண்ணுடைய மாரியம்மனுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர்.

வீரபாண்டி கெளமாரியம்மன்.
வீரபாண்டி கெளமாரியம்மன்.

கண் நோய் குறைபாடு உள்ளவர்கள் அம்மனை வேண்டி பச்சை மாவினால் ஆன மாவிளக்கை ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்குப் பூப் பல்லாக்கு நிகழ்வு சிறப்பாக நடைபெறும். திருவிழாக் கோலமாகக் காணப்படும் வீரபாண்டி மாரியம்மனைக் காண வெளிமாநில பக்தர்களும் அதிகம் வருகின்றனர். அம்மை நோயினால் பாதித்தவர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். அம்மனை மனமுருகி வேண்டி வழிபட்டால் நாம் நினைக்கும் காரியம் நிறைவேறும் என்பது மக்களின் மனதில் உள்ள நம்பிக்கை. பிரார்த்தனை பூர்த்தி அடைந்தால் அடுத்து வரும் சித்திரைத் திருவிழாவில் நேர்த்திக் கடனை நிறைவேற்றி அம்மனை வழிபடுகின்றனர்.

ஓம் சக்தி
ஓம் சக்தி

'எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா!'

என அந்த விழா நடைபெறும் இடம் எங்கும் சக்தி அன்னையின் சாந்நித்யம் பொங்கிப் பெருகியபடி இருக்கும். திரும்பும் திசையெல்லாம் பறை ஒலிக்கும் ஓசை, "ஓம் சக்தி பராசக்தி" என்ற கோஷம் ஆகியன அம்மனை பக்தி பரவசத்துடன் அழைக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism