Published:Updated:

`ஹேப்பி பர்த்டே அகிலா!’ - குழந்தையாய் மாறி உற்சாகமான திருவானைக்காவல் கோயில் யானை!

அகிலா யானை

‘ஹேப்பி பர்த்டே அகிலா!’ என பக்தர்களும் குழந்தைகளும் பாட, வாழ்த்துகளுக்கு நன்றி என்பதைப் போல அகிலா தனது துதிக்கையை ஆட்டி நன்றி தெரிவித்து பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

`ஹேப்பி பர்த்டே அகிலா!’ - குழந்தையாய் மாறி உற்சாகமான திருவானைக்காவல் கோயில் யானை!

‘ஹேப்பி பர்த்டே அகிலா!’ என பக்தர்களும் குழந்தைகளும் பாட, வாழ்த்துகளுக்கு நன்றி என்பதைப் போல அகிலா தனது துதிக்கையை ஆட்டி நன்றி தெரிவித்து பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Published:Updated:
அகிலா யானை

பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. காவிரியில் இருந்து துதிக்கையின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து யானை சிவபெருமானை வணங்கிய தலம் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் கோயில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், சுவாமி தங்கரதப் புறப்பாடு உள்ளிட்ட திருவிழா உற்சவங்களிலும் கோயில் யானை அகிலா ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

அகிலா யானை
அகிலா யானை

அகிலாவுக்காகக் கோயில் நந்தவனத்தில் நடைபாதை, பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் 1,200 சதுர அடியில் சேற்றுக் குளியலுக்காகப் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. 24.5.2002-ல் பிறந்த அகிலா யானையானது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது திருக்கோயில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காகத் திருவானைக்காவல் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அகிலா யானை திருவானைக்காவலில் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில் 19 வயது நிறைவுபெற்று 20-வது வயதை எட்டிய அகிலா யானைக்கு நேற்றுக் கோயில் நிர்வாகம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
யானை அகிலா
யானை அகிலா

பிறந்தநாளையொட்டி அகிலா குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. அதன்பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அர்ச்சகர்கள் யானை அகிலாவிற்கு கஜபூஜை நடத்தினர். பின்னர் அகிலாவிற்குப் பிடித்தமான கடலை மிட்டாய், கொழுக்கட்டை, தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, வெள்ளரிப்பழம், பேரிட்சம் பழம், மாம்பழம், வெள்ளரிக்காய், கேரட், வெண் பூசணி, முள்ளங்கி, பீட்ருட் போன்ற உணவுப் பொருள்களை வழங்கி மகிழ்வித்தனர். யானைப் பாகன்கள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு யானை அகிலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடி மகிழ்ந்தனர்.

‘ஹேப்பி பர்த்டே அகிலா!’ என பக்தர்களும் குழந்தைகளும் பாட, வாழ்த்துகளுக்கு நன்றி என்பதைப் போல அகிலா தனது துதிக்கையை ஆட்டி நன்றி தெரிவித்து பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism