Published:Updated:

திருவாரூர் தேர் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்... இன்று நடைபெற்ற விநாயகர் தேர் வெள்ளோட்டம்!

திருவாரூர் தேர் வெள்ளோட்டம்

ஆழித்தேர் திருவிழாவில் மற்ற தேர்களுடன் உலா வரக்கூடிய விநாயகர் தேர் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தேர் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்... இன்று நடைபெற்ற விநாயகர் தேர் வெள்ளோட்டம்!

ஆழித்தேர் திருவிழாவில் மற்ற தேர்களுடன் உலா வரக்கூடிய விநாயகர் தேர் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

Published:Updated:
திருவாரூர் தேர் வெள்ளோட்டம்

திருவாரூரில் உள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோயில் இந்திய அளவில் புகழ்மிக்கது. இக்கோயிலில் உள்ள தியாகராஜர் தேர், ஆசிய அளவில் மிகப்பெரிய தேர் என போற்றப்படுவது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய தேர்த் திருவிழாவை தரிசிக்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இங்கு நடைபெறக்கூடிய தேர்த் திருவிழா, உலக அளவில் பிரசித்தி பெற்றது.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் திருக்கோயில் பலநூறு ஆண்டுகள் பழைமை மிக்கது. சைவ சமய மரபின் தலைமை பீடம் என இக்கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலில் நடைபெறக்கூடிய ஆழித்தேர் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் வெள்ளத்தில் உருண்டு வரக்கூடிய பிரமாண்டத் தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். 'ஆரூரா... தியாகேசா' என்று பக்தர்கள் முழக்கமிட பிரமாண்டமான தேர் ஆடி அசைந்து வருவதைக் காணும் மக்கள் கூட்டம் பக்தி பரவசத்தில் மூழ்கும்.

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நிறைவு நிகழ்ச்சியாக இத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி பங்குனி 1 அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவாரூர் தேர் வெள்ளோட்டம்
திருவாரூர் தேர் வெள்ளோட்டம்

இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆழித் தேர் திருவிழாவில் மற்ற தேர்களுடன் உலா வரக்கூடிய விநாயகர் தேர் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் தியாகராஜர் தேர், விநாயகர் தேர், சுப்ரமணிய தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் உள்ளிட்ட மொத்தம் 5 தேர்கள் வலம் வரும். இந்த நிலையில் ஆழித் தேரோட்ட விழா மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பழைமையான விநாயகர் தேர் சேதமடைந்த நிலையில் புதிய தேர் முப்பத்தி ஒன்பது லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் வெள்ளோட்டம், திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. கீழவீதியில் புறப்பட்ட தேர் தெற்கு வீதி வழியாக, மேல வீதி பகுதியில் வந்தபோது சட்டமன்ற அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சார்பில் தேர் கொத்தனார் மற்றும் கோயில் ஊழியர்கள் முக்கிய நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism