Published:Updated:

தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம் எப்படி நடக்கும் தெரியுமா?

தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய தரும்புர ஆதீனப் பட்டணப்பிரவேச நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம் எப்படி நடக்கும் தெரியுமா?

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய தரும்புர ஆதீனப் பட்டணப்பிரவேச நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Published:Updated:
தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் உள்ளது. இங்கு பட்டணப்பிரவேசத்திற்கான பெருவிழா இன்று (12.5.2022) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவையொட்டி மே 18-ம் தேதி இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜையும், மே 20-ம் தேதி காலை 8 மணிக்குமேல் திருத்தேர் உற்சவமும், மே 21-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்
தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்

தொடர்ந்து, தருமபுரம் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் நன்பகல் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு குருமூர்தத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் வழிபாடாற்றுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழாவின் முக்கிய நிகழ்வான பட்டணப்பிரவேசம் 11-ம் திருநாளான மே 22-ம் தேதி இரவு நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம், ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு செய்து, காலை 10 மணிக்கு ஸ்ரீஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடாற்றுகிறார். தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மாகேசுவர பூஜை நடைபெறுகிறது.

தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்
தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம்

இரவு 10 மணிக்கு தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும். இம்முறை பட்டணப்பிரவேச நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism