Published:Updated:

`பல 100 கி.மீ தூரம் பாதயாத்திரை வரும் நகரத்தார்' வைத்தீஸ்வரன்கோவிலில் வழிபாடு!

பாதயாத்திரை

காரைக்குடி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகவும் திகழ்கிறது

`பல 100 கி.மீ தூரம் பாதயாத்திரை வரும் நகரத்தார்' வைத்தீஸ்வரன்கோவிலில் வழிபாடு!

காரைக்குடி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகவும் திகழ்கிறது

Published:Updated:
பாதயாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம்  வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்துக்கு உட்பட்ட பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாதசுவாமி  அருள்பாலிக்கும் திருத்தலம் அமைந்துள்ளது. தருமபுர ஆதின பரிபாலனத்தில் உள்ள இக்கோயில் நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரியதாக விளங்குகிறது.

பாதயாத்திரை
பாதயாத்திரை

மேலும் காரைக்குடி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகவும் திகழ்கிறது. எனவே நகரத்தார் சமுகத்தினர் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2 வது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வகையில் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான இன்று (26.04.2022) நகரத்தார் சமூகத்தினர் வழிபாடு செய்வதற்காகத் தங்கள் ஊர்களிலிருந்து மஞ்சள் தடவிய வேப்பிலை செருகிய குச்சியினை கையில் ஏந்தி ,பாதயாத்திரையாகப் புறப்பட்டு பலநூறு கி.மீ நடைப்பயணமாகக் கோயிலுக்கு வந்த வண்ணமுள்ளனர். நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை வழியாகப் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் சமூக ஆர்வலர்கள் நீர்மோர் மற்றும் அன்னதானம் அளித்து உதவினர்.

பாதயாத்திரை
பாதயாத்திரை

வெயில் சூட்டைத் தணிக்க மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில்வரை மயிலாடுதுறை நகராட்சி சார்பில் டேங்கர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. இன்று  லட்சக்கணக்கான பக்தர்கள் வைதீஸ்வரன்கோவிலில் குல தெய்வவழிபாடு செய்து சாமி தரிசனம் செய்வர். இதனால் வைத்தீஸ்வரன்கோவில் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism