Published:Updated:

ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் கடலில் புனித நீராடக் குவிந்த பக்தர்கள்; தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் ராமநாதபுரம் சேதுக்கரை கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்

ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் கடலில் புனித நீராடக் குவிந்த பக்தர்கள்; தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் ராமநாதபுரம் சேதுக்கரை கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்

Published:Updated:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள்

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் கடற்கரை, நீர்நிலைகள், தீர்த்தங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

உலகப் பிரசித்தி பெற்ற புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கிவரும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதன்படி ஆடி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக மிக பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடிவிட்டு கோயிலின் ரதவீதிசாலையில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடும் காட்சி
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடும் காட்சி

அதேபோல் ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் சேதுக்கரை கடல் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதனை ரத்னாகர தீர்த்தம் என்று அழைப்பதோடு ராமாயணக் காவியத்தோடு தொடர்புடையதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனால் ராமேஸ்வரத்தை போல் இந்த ரத்தினகர தீர்த்தக் கடலிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர். இதையடுத்து இன்று ஆடி அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேதுக்கரை கடற்கரையில் அதிகாலை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். புனித நீராடிய பின்பு அங்குள்ள சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் யாகம் மற்றும் தர்ப்பணங்களைச் செய்துவைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் ராமேஸ்வரத்திற்குச் செல்ல வந்த பக்தர்கள் ராமநாதபுரம் சேதுக்கரைக்குப் புனித நீராட வருகை தந்தனர். இதனால் எதிர்பார்த்ததைவிடப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அந்தப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.