Election bannerElection banner
Published:Updated:

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 28 நாள்கள் கழித்து திருப்பதிக்கு வாருங்கள்... தேவஸ்தானம் வேண்டுகோள்!

திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானம்

தங்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திருப்பதிக்கு வர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலை திருப்பதியில் கோடை விடுமுறையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பதி
திருப்பதி

வெயிலின் கடுமை பக்தர்களின் கால்களை சுடாமலிருக்க அனைத்துச் சாலைகளின் நடைபாதையிலும் பாதசாரிகள் கடக்கும் இடங்களிலும் நான்குமாட வீதிகளும் வெள்ளை நிற குளுமையான வர்ணங்கள் அடிக்கப்படும். இது வாரத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். இதற்காக 3,500 சேவகர்கள், 1500 சாரணர் படையினரும் இந்தச் சேவையை வழங்க இருக்கிறார்கள்.

அதிக அளவு பக்தர்கள் தங்குவதற்குரிய நிழற் பந்தல்கள் அமைக்கப்படும். பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் கூடுதலாக லட்டுகள் உற்பத்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tirupaty
Tirupaty

பக்தர்களின் தண்ணீர் தேவைக்கு தேவஸ்தானம் சார்பில் ஆர்.ஓ வாட்டர் பிளான்ட்கள் திருமலை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. திருமலையில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் பிளாஸ்டிக் தவிர்த்து தாமிரம், எவர்சில்வர் மற்றும் டப்பர்வேர் பாட்டில்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாடு முழுவதும் பரவலாக இருந்து வருகிறது. எனவே, பக்தர்கள் தங்களுக்குத் தேவையான மாஸ்க் சானிடைஸர் போன்றவற்றை எடுத்து வருவது நல்லது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 28 நாள்கள் கழித்து திருப்பதிக்கு வாருங்கள்... தேவஸ்தானம் வேண்டுகோள்!
JAISEKHARQ

இதையொட்டி வெளிநாடுகளிலிருந்து திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்தியாவுக்கு வந்து 28 நாள்கள் இருந்த பின் தங்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திருப்பதிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற ஒரு தலமாக திருமலை - திருப்பதி விளங்குவதால் வெளிநாடு வாழ் பக்தர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு