Election bannerElection banner
Published:Updated:

திருப்பதியில் முதியோர், கைக்குழந்தைகளுடன் வருவோருக்கான சிறப்பு தரிசன அனுமதி தேதிகள் விவரம்!

திருப்பதி
திருப்பதி

மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியாகியுள்ளன. பக்தர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு, சுவாமி தரிசனம் செய்யலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், விஐபி தரிசனம் செய்ய விரும்புகிறவர்கள், திருப்பதி வேங்கடேஸ்வரா ஆலய நிர்மாண டிரஸ்ட் என்னும் `ஸ்ரீவாணி' அமைப்புக்கு 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால், விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.

திருப்பதி
திருப்பதி

இதைத் தொடர்ந்து, பக்தர்கள் ரூ 500 கட்டணம் செலுத்தினால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும். இந்த விஐபி தரிசன டிக்கெட்டைக் கொண்டு நாம் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை இரண்டடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான நிதி சேர்க்கை சிறப்பான முறையில் நடந்துவருகிறது. இதற்காக ஆன்லைன் புக்கிங், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.

தாய்லாந்து பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய திருப்பதி ஏழுமலையான்! #Tirupati

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே கிட்டத்தட்ட 346 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள், 34 லட்சத்து 600 ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர். இவர்களில் 147 பேர் நேரடியாக நிதி வழங்கியும் 199 பேர் ஆன் லைன் மூலமாக பதிவுசெய்தும் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

திருப்பதி
திருப்பதி

ஒரு சிலர், விஐபி தரிசனக் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்று எண்ணுகிறார்கள். உண்மை அதுவல்ல, விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்குபவர்களுக்கு, ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது என்பதுதான் உண்மை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இவை தவிர, மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியாகியுள்ளன. பக்தர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு இலவச தரிசன அனுமதி, இந்த மாதம் டிசம்பர் 17 -ம் தேதி வழங்கப்படுகிறது.

டிக்கெட் கவுன்டர்
டிக்கெட் கவுன்டர்

கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு இலவச தரிசன அனுமதி, நாளை (11-ம் தேதியும்) 18 -ம் தேதியும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு