Published:Updated:

திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா: கட்டுப்பாடுகளுடன் நடக்கவிருக்கும் வைபவங்கள் என்னென்ன?

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா: இன்று மாலை 5.10 மணி முதல் 5.30 மணிக்கு இடையே திருமலை ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இன்றிரவு பெரிய சே‌ஷ வாகன சேவையும், இந்த விழாவின் முக்கிய சேவையான கருட சேவை அக்டோபர் மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அதேநாள் காலையில் மோகினி அலங்கார சேவையும் நடைபெறும். மறுநாள் 12-ம் தேதி தங்க தேர்த் திருவிழாவும், இறுதி நாளான 15-ம் தேதி காலை சக்கர ஸ்நானமும் அதேநாள் மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவ விழா!
திருப்பதி பிரம்மோற்சவ விழா!

அதன்படி இன்று மாலை 5.10 மணி முதல் 5.30 மணிக்கு இடையே திருமலை ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

நவராத்திரி நாள் - 1: கொலுப் படிகள் வைப்பது ஏன்? கொலு பொம்மைகள் சொல்லும் தத்துவங்கள் என்னென்ன?!

பெருந்தொற்று பரவல் காலம் என்பதால் இந்த விழா பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி வீதி உலா கூட வரவில்லை. ஏகாந்த பிரம்மோற்சவமே நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் பெருமளவு பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவைக் காண ஏற்கெனவே ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருப்பதி திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவ விழா
திருப்பதி பிரம்மோற்சவ விழா

கடுமையான கட்டுப்பாடுகளுடன் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாள்களும் திருப்பதி திருமலைப் பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருப்பதி தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் அன்னதானம் வழங்கப்படும். மலையின் கீழே இருந்து மேல்திருப்பதி செல்ல தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் மனம் கவர்ந்த லட்டு பிரசாதம் தடையின்றி கிடைக்கவும் தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு