Published:Updated:

"அய்யர்மலை ரோப்கார் பணி விரைவில் முழுமைக்கு வரும்!" - அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

பி.கே.சேகர்பாபு ஆய்வு ( ராஜமுருகன் )

"ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், அமைச்சர் என்ற முறையில் நானும் இங்கு ஆய்வு செய்தேன். விரைவில் ரோப்கார் வசதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்."

"அய்யர்மலை ரோப்கார் பணி விரைவில் முழுமைக்கு வரும்!" - அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

"ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், அமைச்சர் என்ற முறையில் நானும் இங்கு ஆய்வு செய்தேன். விரைவில் ரோப்கார் வசதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்."

Published:Updated:
பி.கே.சேகர்பாபு ஆய்வு ( ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது அய்யர்மலை. இங்குள்ள இரத்தினகிரீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பத்து வருடங்களுக்கு மேலாக இங்கு ஆமை வேகத்தில் ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், "ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் முழுமையாக முடிவுக்கு வரும். ரோப்காரில் பக்தர்கள் மலை ஏறி, இரத்தினகிரீஸ்வரை தரிசிக்கலாம்" என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளது, பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பி.கே.சேகர்பாபு ஆய்வு
பி.கே.சேகர்பாபு ஆய்வு
ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அய்யர்மலையில் உள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலை துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது, குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர்மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால், காசிக்கு போனதற்குச் சமம் என்பர். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிறு மலைகுன்றின் மீது அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலை, 1117 படிக்கட்டுகளை ஏறி கடந்தால்தான் அடைய முடியும்.

பி.கே.சேகர்பாபு ஆய்வு
பி.கே.சேகர்பாபு ஆய்வு
ராஜமுருகன்

இந்த நிலையில், பக்தர்களின் சிரமத்தைப் போக்க, கடந்த 2006 - 2011 தி.மு.க ஆட்சியில் மலைக்கு ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்தப் பணி மெதுவாக நடந்து வந்தது. இந்த நிலையில்தான், தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ரோப்கார் அமைக்கும் பணியை முடுக்கிவிட்டிருப்பது, பக்தர்களைப் பரசவத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று, இந்தக் கோயிலுக்கு வருகைதந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நேரில் ஆய்வு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

"அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1117 படிக்கட்டுகளைக் கடந்து மலை உச்சியில் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ரோப்கார் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், 2017-ம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. கடந்த ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது. இருந்தாலும், முழுமையான அளவு பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், இதனை வயது முதிர்ந்தோர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் மேற்பார்வையில், தனியார் பங்களிப்புடன் ரூ. 6.7 கோடி மதிப்பில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பி.கே.சேகர்பாபு ஆய்வு
பி.கே.சேகர்பாபு ஆய்வு
ராஜமுருகன்

ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒரு முறை இதனை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், அறநிலைத்துறை ஆணையாளர் மற்றும் அமைச்சர் என்ற முறையில் நானும் இங்கு ஆய்வு செய்தேன். விரைவில் ரோப்கார் வசதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். அதேபோல், குளித்தலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கும் கோரிக்கையையும் நிறைவேற்ற இருக்கிறோம். தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை தொகுதி. அதனால், இத்தொகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறநிலையத்துறை கீழ் உள்ள நிலத்தில் அமைப்பதற்கான கருத்துருவை தயார் செய்து அனுப்பினால், அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism