Published:Updated:

தூப்புல் மகான் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர தினம் இன்று!

தூப்புல் மகான் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர தினம் இன்று!

சுவாமி வேதாந்த தேசிகர்
சுவாமி வேதாந்த தேசிகர்

வைணவ சமய ஆசார்ய குருமார்களுள் வேதாந்த தேசிகர் மிகவும் குறிப்பிடத்தவர். கி.பி1268 -ம் ஆண்டு விபவ வருடம் புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தார் தேசிகர். இவரது இயற்பெயர் வேங்கடநாதன். `தூப்புல் பிள்ளை' என்றும் `வேதாந்த தேசிகர்' என்றும் போற்றப்பட்டு ஆசார்ய பரம்பரையில் குறிப்பிடத்தக்கவராக ஆனார்.

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

ஏழாம் வயதில் குருவான கிடாம்பி அப்புள்ளாரிடம் கல்விகற்கச் சேர்ந்த வேங்கடநாதன் வேதங்களிலும் திவ்யபிரபந்தங்களிலும் தேர்ச்சி பெற்றார். பின்பு இல்லற தர்மத்தில் புகுந்த தேசிகன் தன் வாழ்வில் 124 நூல்களை இயற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் ராமாநுஜரின் கொள்கைகளைப் பரப்புவதிலேயே செலவிட்டு அடியார்க்கு அடியாராய் வாழ்ந்தார். பாரத தேசம் முழுமையும் பயணம் செய்து வைணவத்தைப் பரப்பினார்.

Vikatan

`தேசிக' என்பதற்கு `திசை காட்டுபவர்' என்று பொருள். ஆத்ம லட்சியமாகிய இறைவனின் திருவடியை அடைய திசை காட்டுபவர் என்பதுவே தேசிகன் என்பதன் பொருள். அதற்கேற்ப தேசிகரும் வைணவ சமயம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி பக்தி மார்க்கத்துக்கு வழிகாட்டினார்.

தூப்புல் மகான் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர தினம் இன்று!

இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தன. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பலரும் சுவாமிகள் மேல் பொறாமை கொண்டு அவர் புகழுக்குக் கலங்கம் விளைவிக்க முயன்றனர். அந்தத் தருணங்களில் எல்லாம் தேவராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் அவருக்கு வேண்டிய அருள் செய்து தேசிகரின் புகழை உலகறியச் செய்தனர்.

வேதாந்த தேசிகரின் திருநட்சத்திர தினத்தையொட்டி, அவதார ஸ்தலமான தூப்புல்லில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் வார்ஷிக மகோத்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். செப்டம்பர் 30 - ம் தேதி இந்த உற்சவம் தொடங்கியது.

தூப்புல் மகான் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர தினம் இன்று!

5 -ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இன்று (8.10.19) விளக்கொளிப் பெருமாள், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எழுந்தருள மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. உற்சவத்தின் கடைசி தினமான நாளை கந்தப் பொடி வசந்த சேவையும் விமான உற்சவ சேவையும் நடைபெறும்.