Published:Updated:

மதுரையிலிருந்து ஷீர்டிக்கு தனியார் பங்களிப்புடன் ஆன்மிக சுற்றுலா ரயில்!

ஷீர்டி சாய் பாபா

ஆகஸ்ட் 21 அன்று காலை 7.45 மணிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீர்டிக்கு புறப்படுகிறது.

மதுரையிலிருந்து ஷீர்டிக்கு தனியார் பங்களிப்புடன் ஆன்மிக சுற்றுலா ரயில்!

ஆகஸ்ட் 21 அன்று காலை 7.45 மணிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீர்டிக்கு புறப்படுகிறது.

Published:Updated:
ஷீர்டி சாய் பாபா
வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி, மதுரையிலிருந்து ஷீர்டிக்கு ஆன்மிக சுற்றுலா ரயில் புறப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. கடந்த மாதம் நாட்டிலயே முதல் முறையாக கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்சேவை தொடங்கப்பட்டது.

பாரத் கவுரவ் திட்டத்தின் மூலம் இதுபோன்று தனியார் பங்களிப்புடன் சுற்றுலா ரயில்களை இயக்கி வரும் இந்திய ரயில்வே துறை, கடந்த ஜூலை 23 அன்று மதுரையிலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயிலை இயக்கியது. காசி வரையிலான சுற்றுலா நிறைவு பெற்று ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலை ரயில் மதுரை வந்து சேருகிறது.

சாய்பாபா
சாய்பாபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ஆகஸ்ட் 21 அன்று காலை 7.45 மணிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீர்டிக்கு புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஹைதராபாத் செல்கிறது. அங்கு பயணிகள் சலர்ஜங் அருங்காட்சியகம், சார்மினார், ராமாநுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகிய இடங்களைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆகஸ்ட் 24 அன்று ஷீர்டி சாய்பாபா தரிசனம் செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாள் சனிசிங்னாபூர் சென்று பின்பு நாசிக் நகரில் இறங்கி திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம். ஆகஸ்ட் 27-ல் பண்டரிபுரம் பாண்டுரங்கர் தரிசனம் செய்யலாம். ஆகஸ்ட் 28- அன்று மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம். இங்ஙனம் அமையும் இந்த ஆன்மிகச் சுற்றுலா ஆகஸ்ட் 29 அன்று நிறைவடைகிறது. 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ரயில் மதுரையை வந்தடையும்.

இந்த உலா ரயிலில் 3 ஏ.சி பெட்டிகளுடன், படுக்கும் வசதி கொண்ட கோச்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுவையான தென்னிந்திய சைவ உணவு வழங்கும் 2 பேன்டரி பெட்டிகள் உள்ளன.

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம்

சுற்றுலாவில் தங்கும் இடம், உணவு, உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து என அளிக்கப்படும் அனைத்து வசதிகளுக்கும்... கம்போர்ட், ஸ்டாண்டர்ட், பட்ஜெட் என 30,000, ரூ 24,000, ரூ 16,900 என 3 வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருவர் அதற்கு மேற்பட்டு குடும்பமாகச் செல்லும்போது, சலுகை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு கட்டணம் குறைக்கப்படுகிறது.

இந்தச் சுற்றுலாவிற்கு www.ularail.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.