Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்...

நாங்கள் ‘அனந்த பத்மநாப விரதம்’ மற்றும் `சத்யநாராயண விரதம்’அனுஷ்டித்து வருகிறோம். இந்த விரதம் தொடர்பான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.

அன்பார்ந்த வாசகர்களே... உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

* வண்ணச்சரபம் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள் அருளிச்செய்த `திருமகள் அந்தாதி’ புத்தகம் தேவைப்படுகிறது. `திருமகளே’ என்று தொடங்கி, 100 வது பாடல் `திருமகளே’ என்றே முடியும். இந்தப் புத்தகத்தின் நகல் அல்லது புத்தகம் கிடைக்கும் இடம் குறித்த முகவரியைப் பகிர வேண்டுகிறேன்.

-நா.ரெங்கப் பிரசாத், சிறுகமணி

* காஞ்சி மகாபெரியவரின் அணுக்கத் தொண்டர்கள் பற்றிய தொகுப்பு `திருத்தொண்ட புராணம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அது யாரிடமாவது இருந்தாலோ அல்லது வெளியீட்டாளர் பற்றிய விவரம் அறிந்தாலோ தெரிவிக்க வேண்டுகிறேன்.

-சி.வி.அனந்தராமன், சென்னை

* எனக்கு, ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகளின் சரிதம் தேவைப்படுகிறது. அவரின் வரலாறைச் சொல்லும் புத்தகம் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் தகவல் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.மூர்த்தி, வள்ளியூர்

* நான் அனுமன் பக்தன். திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமன் கோயில் ஒன்றில், பிரார்த்தனை நிமித்தம் படிப் பாயசம் சமர்ப்பிக்கும் வழிபாடு உள்ளதாக அறிந்தேன். ஆனால், அந்தக் கோயில் இருக்கும் இடம் துல்லியமாகத் தெரியவில்லை. நெல்லை மாவட்டத்து அன்பர்கள் - தகவல் அறிந்தவர்கள் விவரம் பகிர்ந்துகொண்டால், நேரில் சென்று வழிபட ஏதுவாக இருக்கும். என் வேண்டுதலையும் சமர்ப்பித்து வருவேன். தகவல் தந்து உதவுங்களேன்.

அதேபோல், ‘ஸ்ரீஹனுமத் விம்சதி’ ஸ்தோத்திர நூல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நூல் வைத்திருக்கும் அன்பர்கள் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்!

- எம்.வீரமனோகரன், மேலூர்

நாங்கள் ‘அனந்த பத்மநாப விரதம்’ மற்றும் `சத்யநாராயண விரதம்’அனுஷ்டித்து வருகிறோம். இந்த விரதம் தொடர்பான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம். இந்த விரதங்கள் நியதிகள், விரதக் கதைகள் ஆகியவற் றுடன் முழுமையான விளக்கங்கள் அடங்கிய நூல்கள் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

-எஸ்.வாசுதேவன், சென்னை-58

உதவிக் கரம் நீட்டியோர்...

திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர் சபாபதி, கணேச ஸ்வாப கீதம் எனும் பெயரிலான விநாயகர் ஸ்லோகம் வேண்டும் என்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அவருக்காகவும் வாசகர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் அந்த ஸ்லோகம் இங்கே உங்களுக்காக....

உதவலாம் வாருங்கள்...

கணேச ஸ்வாப கீதம்

கைலாஸ சிகரவரே கார்த்தஸ்வரா கலிதே |

கல்யாண நவஸதனே கலபமுக சேஷ்வஸூகம் ||

ஆமோத வர்த்தியுதே அபிராம சித்ரசிதே |

ஆநந்த நிலயவரே ஹஸ்திமுக சேஷ்வஸூகம் ||

மஞ்சே மணிகலிதே ம்ருதுலோபதாநயுதே |

மந்தார ஸூம சயனே மதனசம சேஷ்வஸூகம் ||

காலாகரு தூபயுதே கற்பூர தீபக்ருஹே |

காந்தயாலிங்கிதயா கரிவதன சேஷ்வஸூகம் ||

புக்த்வா மதுரபலம் மோதக ஸதேநயுதம் |

பீத்வாச துக்தமிதம் புவனேச சேஷ்வஸூகம் ||

குண்டலினீ கூடதடே கோணத்ரிதயேநயுதே |

மூலே கமலதளே மங்களத சேஷ்வஸூகம் ||

ஸஹஸ்ரார தாமரஸே சதசந்த்ர காந்தியுதே |

நீலா லலிதரத சிவதநய சேஷ்வஸூகம் ||

ராகேந்து ஸெளதவரே ஓங்கார மஞ்சதலே |

ஹ்ரீங்கார தேவதயா தந்திமுக சேஷ்வஸூகம் ||

`கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திர மாலா’ எனும் நூலில் உள்ளது இந்த ஸ்லோகம். இரவில் அர்த்தஜாம பூஜையான பிறகு விநாயகர் சந்நிதியில் இந்த ஸ்லோகங்களைச் சொல்லி வணங்குவர்.

*******

சக்தி விகடன் 20.10.2020 இதழில் துறையூர் வாசகர் சி.ராமநாதன், ‘மிகையுந் துரத்தவெம்பிணியுந் துரத்த...’ என்று தொடங்கும் பாடல் குறித்துக் கேட்டிருந்தார். அவருக்காக அந்த முழுப் பாடலையும் திருச்சி வாசகி எஸ்.உமா அனுப்பி வைத்துள்ளார். அந்தப் பதிகப்பாடல் துறையூர் வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002 Email: sakthi@vikatan.com