Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்தோத்திரங்களில் ‘அமிர்த சஞ்ஜீவினி’ மிகவும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள்.

உதவலாம் வாருங்கள்

லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்தோத்திரங்களில் ‘அமிர்த சஞ்ஜீவினி’ மிகவும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள்.

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்
அன்பார்ந்த வாசகர்களே... உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்

* லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்தோத்திரங்களில் ‘அமிர்த சஞ்ஜீவினி’ மிகவும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், எவரிடம் கேட்டும் அந்த ஸ்தோத்திரம் எங்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. எவரிடமேனும் அந்த ஸ்தோத்திர நூல் இருந்தால் எனக்குத் தந்து உதவுங்களேன்.

- எஸ். பாக்கிய லட்சுமி, சேலம்.

* நாங்கள் வாதூல கோத்திரக்காரர்கள். வாதூல மகரிஷி பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ அல்லது புத்தகங்கள் இருந்தாலோ தெரிவிக்கவும்.

- ஆர். வெங்கட்ராமன், திருப்பூர்

* 1960-களில் சித்ரா பௌர்ணமி தோறும் எட்டுக்குடி முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபடுவார் என் தாத்தா. அவர் காவடியில் பயன் படுத்திய வஜ்ரவேல் கடந்த 50 ஆண்டுகளாக வழிபாடு இன்றி உள்ளது.

அதை எடுத்து வந்துள்ளேன். சஷ்டிதோறும் பூஜை செய்ய விரும்புகிறேன். வேல் வழிபாட்டுக்குரிய வழிமுறை புத்தகம், மந்திரங்கள் உள்ளனவா. வழிகாட்டுங்களேன்.

- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

* ‘சக்தி எங்கே, சிவம் எங்கே

சிவ சக்தி எங்கே எங்கே

சிந்தனை செய் மனமே,

இங்கே சிந்தனை செய் மனமே’

எனும் பாடலை முழுமையாக அறிய விரும்புகிறேன். வாசகர்கள் எவரேனும் உதவினால் மகிழ்வேன்.

- சண்முக சுந்தரம், கோயம்புத்தூர்

* எனக்குச் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு சம்ஸ் கிருதம் தெரியாது. தமிழில் உரைநடையாக உள்ள சுந்தர காண்டம் பகுதியைப் படிக்கலாமா அல்லது பாராயணம் செய்வதற்கென்றே தமிழில் ஏதேனும் சுந்தரகாண்டம் விளக்க நூல் உள்ளதா? தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கல்யாணி, உவரி.

* சித்தர்கள் வழிபாடு மற்றும் தியான வழிமுறை குறித்துப் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் நூல்கள் இருந்தால், பரிந்துரை செய்யுங்களேன்.

- நமசிவாயம், நெய்வேலி

* குமார ஸ்தவம், வேல்வகுப்பு துதிப் பாடல் நூல்களும், பாம்பன் ஸ்வாமிகளின் சரிதம் குறித்த புத்தகமும் எனக்குத் தேவை. எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன். இந்த நூல்கள் எங்கு கிடைக்கும் என்ற விவரத்தைப் பகிர்ந்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.கிருஷ்ணன், சென்னை-45

* வராத்திரியில் அம்மன் படத்துக்கு தினமும் குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம் என்று கேள்விப்பட்டேன். அவ்வாறு வழிபடுவதற்கென ஒன்பது நாள்களுக்கும் தனித் தனியாக அஷ்டோத்திரங்கள் உள்ளனவா? அறிந்தவர்கள் வழிகாட்டி உதவுங்களேன்.

- சியாமளா, சிதம்பரம்.

உதவிக் கரம் நீட்டியோர்...

உதவலாம் வாருங்கள்

சக்திவிகடன் 28.7.2020 தேதியிட்ட இதழிலில் தூத்துக்குடியைச் வாசகர் சி.சண்முகநாதன், ஆதி காமாட்சி அம்மன் கோயில் எங்குள்ளது என்று கேட்டிருந்தார். அதற்கான பதிலை காஞ்சிபுரம் வாசகர் கே.கணேஷ் பகிர்ந்துள்ளார்:

`காளிகாம்பாள் என்று அழைக்கப்படும் ஆதிகாமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில்தான் உள்ளது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் மதில்சுவருக்கு அருகிலேயே இந்த ஆலயம் உள்ளது. பழைமையான இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் ஆதி காமாட்சி. ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள சுவரில் மிகப்பழைமையான ஆதிகாமாட்சி திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்ன-600 002, Email: sakthi@vikatan.com