திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

வாதாபி கணபதி போன்று தோற்றம் தரும் சாளுக்கிய பாணி விநாயகர் திருவுருவங்கள் வேறு எந்தத் தலங்களில் உள்ளன.

அன்பார்ந்த வாசகர்களே...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

வாதாபி கணபதி போன்று தோற்றம் தரும் சாளுக்கிய பாணி விநாயகர் திருவுருவங்கள் வேறு எந்தத் தலங்களில் உள்ளன. மகாசங்கட ஹர சதுர்த்தி விரத மகிமை குறித்த நூலும் எனக்குத் தேவைப் படுகிறது. தகவல் அறிந்த அன்பர்கள் விவரம் பகிருங்களேன்.

- எம்.குருபரன், கோவை

மகா விஷ்ணுவின் தசாவதராங்களும் தூண் சிற்பங்களாக ஓர் ஆலயத்தில் இருப்பதாக அறிகிறேன். அது எந்தக் கோயில், எப்படிச் செல்ல வேண்டும். இதேபோல், சிற்பங்களால் புகழ்பெற்ற கோயில்களின் பட்டியல் விவரங்களை அளித்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.

- சோ.ராமு, கள்ளிடைக்குறிச்சி

பதினெண் புராணங்களும் ஒரே தொகுப்பாக புத்தகமாகக் கிடைக்குமா? கிடைக்கும் முகவரி விவரத்தைப் பகிருங்களேன். அல்லது எவரிடமேனும் அந்தப் புத்தகம் இருந்தால் நகல் எடுத்து அனுப்புங்களேன்.

- வே.பரமசிவன், களக்காடு

குலதெய்வக் கோயில் தொடர்பாக பிரச்னம் பார்க்க விரும்புகிறோம். தெய்வ பிரச்னம் பார்க்க வேண்டுமெனில் கேரளத்துக்குத்தான் செல்ல வேண்டுமா? தமிழகத்தில் எந்த இடங்களில் பிரச்னம் பார்க்க இயலும். முகவரி விவரங்களைப் பகிருங்களேன்.

- என்.லோகநாதன், சென்னை-45

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்

நவகிரகங்களைப் போற்றும் நவகிரக கீர்த்தனை களை முத்துசுவாமி தீட்சிதர் அருளியுள்ளார். தெலுங்கு மொழியில் இருப்பதாக அறிகிறேன். தமிழில் எவரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா?

- கி.ராஜலட்சுமி, வள்ளியூர்

சதாசிவ மூர்த்தம் குறித்த விவரங்கள் தேவை. தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் சிவபெருமானின் இந்தத் திருக்கோலம் எந்தக் கோயிலில் உள்ளது. அதேபோல், ரிஷபாந்தக மூர்த்தம் குறித்த விவரம் அடங்கிய நூல் இருந்தாலும் பகிர்ந்து உதவுங்களேன்.

- கோ.வள்ளி நாயகம், தூத்துக்குடி

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்ன-600 002

Email: sakthi@vikatan.com