Published:Updated:

வைகாசி விசாகம்: விராலிமலையில் தேரோட்டம்; அரோகரா கோஷம் முழங்க நடந்த தேர்திருவிழா!

தேர்திருவிழா

தேரோட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்திருந்த நெல்மணிகள், கடலை உள்ளிட்டவைகளை, மலை ஏறுவதற்கான வழியில் உள்ள படிகளில் கொட்டித் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மலைமேல் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம், தைப்பூசத் தேரோட்டம், கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கும். அந்த வகையில், வைகாசி விசாகத் திருவிழா, கொரோனா பரவல், கும்பாபிஷேகப் பணிகள் உள்ளிட்டவைகளால் கடந்த 5 ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா கடந்த ஜூன் 4 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பத்மமயில், நாகம், யானை, வெள்ளிக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விராலிமலைத் தேரோட்டம்
விராலிமலைத் தேரோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் பெரிய தேரிலும், விநாயகர் தனித் தேரிலும் எழுந்தருளினர். கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா.., சுப்ரமணியசுவாமிக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்த்திருவிழாவையொட்டி, நேர்த்திக்கடன் வேண்டிக் கொண்வர்களின் சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

தேரோட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்திருந்த நெல்மணிகள், கடலை உள்ளிட்டவைகளை, மலை ஏறுவதற்கான வழியில் உள்ள படிகளில் கொட்டித் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

இதனை பறவைகள், மயில்கள் இரையாக்கிக் கொண்டன. திருவிழாவில் இன்று ஜூன் 13 - ம் தேதி தீர்த்தவாரி, நடராஜர் ஆனந்த தரிசனம் மற்றும் மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, திருவிழாவின் கடைசி நாளான நாளை, 14 - ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism