Published:Updated:

வேண்டுவனவற்றை அள்ளித்தரும் வரமகாலக்ஷ்மி விரதம்!

வரமகாலக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
வரமகாலக்ஷ்மி

விரதங்கள் விசேஷங்கள்

வேண்டுவனவற்றை அள்ளித்தரும் வரமகாலக்ஷ்மி விரதம்!

விரதங்கள் விசேஷங்கள்

Published:Updated:
வரமகாலக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
வரமகாலக்ஷ்மி

தென்னிந்தியா மற்றும் மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வரலக்ஷ்மி பூஜை, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதப் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 நன்னாளில், நம் இல்லங்களில் எழுந்தருளி அருள்தர இருக்கிறாள் அன்னை மஹாலக்ஷ்மி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நோன்பு தென்னிந்தியாவில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும், கர்நாடகாவில் கொண்டாடப்படுவது

போல மிகவும் விமரிசையாகவும் குதூகலமாகவும் வேறெங்கும் கொண்டாடப்படு வதில்லை. சிறுவயதில் இருந்து என் பிறந்தகத்தில் வருடாவருடம் வரலக்ஷ்மி நோன்பு கடைப்பிடித்து வந்தாலும், திருமணம் ஆகி பெங்களுருக்கு வந்த புதிதில் இந்த பூஜைக்கான கொண்டாட் டங்களைக் கண்டு வியந்துபோனேன்.

இங்கு, இது வெறும் பூஜை மட்டுமல்ல... வீட்டுக்கு வீடு கொண்டாடப்படும் திருவிழா. ஊர் மொத்தமும் வீடுகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். முதல் நாள் வியாழக்கிழமை அம்பாளை வீட்டுக்குள்ளே அழைப்பது, வெள்ளிக்கிழமை விமரிசையாக பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபடுவது, சனிக்கிழமை மஹாலக்ஷ்மியை வீட்டிலேயே தங்குமாறு வேண்டிக்கொண்டு புனர்பூஜை செய்து கலசத்தை எடுப்பது என்று வகைப்படுத்திச் செய்வர்.

நம்பிக்கையோடு பூஜை செய்பவருக்கு மாங்கல்ய பலம், தொழில் அபிவிருத்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வளம் நிறைந்த வாழ்வு, குழந்தைப் பேறு என அத்தனை வரங்களையும் அள்ளிக்கொடுப்பதால் ‘வரமஹாலக்ஷ்மி நோன்பு' என்றே அழைக் கின்றனர் இந்த பூஜையை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் ஊரில், பொதுவாக ‘மாமியார் இல்லத்தில் வரலக்ஷ்மி நோன்பு வழிபடும் பழக்கம் இருந்தால்தான் அதை மருமகள் தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்றொரு ஐதிகம் உண்டு. `அப்படிப் பழக்கத்தில் இல்லாமல் பூஜை எடுத்தால், குடும்பத்துக்கு ஆகாது' என்றெல்லாம் சொல்வார்கள். வேண்டும் - வேண்டாம், ஆகும் - ஆகாது போன்ற பாகுபாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தான்; தெய்வத்துக்கு அல்லவே!

வேண்டுவனவற்றை அள்ளித்தரும் 
வரமகாலக்ஷ்மி விரதம்!

‘எந்த ஒரு தெய்வமும், தன்னை விரும்பி வழிபடுபவருக்கு ஆகாதது செய்துவிடும்’ என்பது ஏற்கத் தகுந்ததல்ல. வழிவழியாக முறைப்படுத்தப்பட்டு வந்த பூஜை கிரமங்களை சரியாக கடைப்பிடிக்காமல் போனால் ஏதேனும் தப்பிதங்களோ, அரைகுறையாகச் செய்து ஆசாரக் குறைவோ ஏற்பட்டுவிடும் என்கிற காரணத்தால் அந்தக் காலத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்றே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இதுவரை நோன்பு இல்லாதவர்கள், இப்போது வழிபட விரும்பினால் தாராளமாக ஆரம்பித்துச் செய்யலாம். ஆனால், அதை நிறுத்தாமல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இயன்ற அளவில் பக்தி உணர்

வோடு நல்ல முறையில் செய்வது குடும்பத்துக்கு மிக நல்ல முன்னேற்றங்களையும் நற்பலன்களையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கலசம் வைத்து, அதை சிறப்பாக அலங்கரித்து அதில் அம்பாளை ஆவாஹனம் செய்து வழிபடுவது இந்த பூஜையின் சிறப்பம்சம். கலசம் வெள்ளி, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்கலாம் (தாமிரத்துக்கு ஆகர்ஷண சக்தி அதிகம் உண்டு. அதனால் தாமிர கலசம் சிறந்தது என்று சிலர் சொல்வார்கள்).

கலசத்தில் நீர் நிரப்பி, அதில் மஞ்சள், எலுமிச்சைப்பழம், வெற்றிலைப்பாக்கு, ஏலக்காய், தங்கம் அல்லது வெள்ளி நாணயம் ஆகியவற்றைப் போடுவர். இதற்கு மாற்றாக, கலசத்தின் உள்ளே அரிசி நிரப்பி அதில் வாசனைப் பொருள்களை இட்டும் தயார் செய்யலாம். கலசத்தின் வாயில் ஐந்து மாவிலைகள் வைத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, அம்பாள் முகத்தை வைத்து, அது கீழே விழுந்துவிடாமல் அழகாகவும் கவனமாகவும் பொருத்த வேண்டும். பஞ்சு மாலை மற்றும் பூச்சரம், காதோலை கருகமணி மற்றும் புது வஸ்திரம் சார்த்தி அலங்கரிக்கலாம்.

நாம் செய்யப்போகும் பூஜையின் பலன்கள் முழுமையாகக் கிடைப்பதற்காக, எந்த ஒரு பூஜைக்கு முன்பும் விநாயக பூஜையும் குலதெய்வ பிரார்த்தனையும் செய்வது மிக அவசியம்.

எனவே, லக்ஷ்மிதேவியை உள்ளே அழைத்து பூஜை தொடங்கும் முன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவேண்டும். நம் குலதெய்வ பிரார்த்தனையும் செய்துகொள்ள வேண்டும்.

லக்ஷ்மிதேவி செல்வத்தின் அதிபதி. அவர் இருக்கும் இடத்தில் சகல சௌபாக்கியங்களும் கொழிக்கும். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பது ஆன்றோர் வாக்கு. வரமஹாலக்ஷ்மி கொண்டாட்டத்தின் முதல் நாள் மாலை, மேற்சொன்னவாறு அலங்கரித்த கலசத்தை, ‘பாக்யாத லக்ஷ்மி பாரம்மா - எங்கள் மனைக்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யம்மா’ என்று அன்போடும் பக்தியோடும் அழைப்பதில் இருந்து தொடங்குகிறது வரமஹாலக்ஷ்மி விரத பூஜை.

கலசத்தைக் கிழக்கு நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். வெள்ளித் தட்டு அல்லது வாழையிலையில் நெல் அல்லது முனை முறியாத பச்சரிசியைப் பரப்பி, அதன்மேல் கலசத்தை அமர்த்தி லக்ஷ்மிதேவியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

சிலர் கலசத்தைத் தம்மிடமுள்ள தங்க நகைகளால் அலங்கரிப்பர். அந்த நகைகள் புதிதாக, இதற்கு முன் நாம் அணிந்துகொள்ளாததாக இருந்தால் அப்படியே கலசத்தில் போட்டு அலங்கரிக்கலாம். நாம் உபயோகப்படுத்திய நகைகள் எனில், அதை கலசத்தில் போட்டு அலங்கரிப்பது உகந்தது அல்ல. அந்த நகைகளைக் காய்ச்சாத பாலில் சிறிதுநேரம் போட்டுவைத்து, பின் நன்னீரால் கழுவி நன்றாகத் துடைத்த பின்பே கலசத்தில் சார்த்த வேண்டும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை பிரதான பூஜை. பூஜைக்கான நைவேத்தியமான கொழுக்கட்டையை ‘கடுபு’ என்பார்கள். கடுபு வகைகள் மற்றும் பாசிப்பருப்பு பாயசம் ஆகியவை முக்கிய நைவேத்தியங்கள்.

லக்ஷ்மிதேவியை துதித்துப் பாடல்கள் பாடி, ஸ்லோகங்கள் சொல்லி பூஜை செய்வர். பூஜை முடிந்து தாம்பூலம் கொடுப்பது இன்றியமையாதது. குறைந்தபட்சம் ஐந்து சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பது விசேஷம்.

தாம்பூலத்தில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், வளையல், மருதாணி, ரவிக்கைத் துணி, நோன்புச் சரடு, தட்சணை (குறைந்த அளவாவது) ஆகியவை இடம் பெற வேண்டும். மேற்கொண்டு அவரவர் விருப்பப்படியும் வசதிப்படியும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் விளக்கேற்றி, ஆரத்தியெடுத்து ‘எங்கள் இல்லத்திலேயே நித்தியவாசம் செய்ய வேண்டும் தாயே’ என லக்ஷ்மிதேவியை பிரார்த்தித்துவிட்டு கலசத்தை எடுக்கலாம். அதில் இருக்கும் அரிசியை, நம் வீட்டு அரிசி ட்ரம்மில் கலந்துவிடலாம். அல்லது சர்க்கரைப் பொங்கல் / கல்கண்டு சாதம் போன்ற இனிப்புவகைகளில் பயன்படுத்துவதும் சிறப்பு.

கலசத்தில் நீர் இருந்தால், பூஜையால் அது புனிதமாகி இருக்கும். அதை வீடு முழுவதும் தெளித்துவிட்டு மிச்ச நீரை, துளசிச் செடியில் ஊற்ற வேண்டும்.

இது பொதுவான பூஜை முறை. அவரவர் வட்டார, குடும்ப வழக்கப்படி இதில் சில மாறுதல்கள் இருக்கும்... அவ்வளவே.

இவ்வாறு நாம் பக்தியுடனும் ஆர்வத்துடனும் செய்யும் பூஜைக்கு மகிழ்ந்து லக்ஷ்மிதேவி சகல சௌபாக்கியத்தையும் நம் இல்லத்தில் அருள்வாள்!

நினைவில்கொள்ள...

பொதுவாகவே எல்லா பூஜை களுக்கும் தேவைப்படும் மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ, அட்சதை, பழம், ஊதுபத்தி, கற்பூரம், வெற்றிலைப் பாக்கு, இன்ன பிற பொருள்கள் தவிர, வரலக்ஷ்மி பூஜைக்குத் தேவையான மிக அவசிய பொருள்கள் மற்றும் நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

நெய்: நல்லெண்ணெய் தவிர நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் லக்ஷ்மிதேவிக்கு ரொம்ப விசேஷம் மற்றும் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.

தேங்காய்: கலசத்தின் வாய் அளவுக்கு ஏற்றவாறு சிறியதாக வாங்கிக்கொண்டால் அழகாகப் பொருந்தியிருக்கும். சிறிய விஷயமாகவே இது தோன்றினாலும், மிகவும் முக்கியமானது. பெரிய தேங்காயாக இருந்தால், சில நேரம் கலசம் கவிழ்ந்துவிட வாய்ப்புண்டு. அல்லது அம்பாள் முக அலங்காரங்கள் செய்யும்போது வசதியாக இல்லாமல் நழுவி உருண்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கலசத்துக்கான தேங்காயை இளம் காயாக, சற்று சிறியதாக வாங்கிக்கொள்வது நலம்.

சுமங்கலிகளுக்கு தாம்பூலத் தில்வைத்துக் கொடுக்க (குறைந்தபட்சம் ஐந்து பேருக்கு)

ஐந்து தேங்காய், பூஜையின்போது உடைப்பதற்கு ஒன்று மற்றும் நைவேத்தியங்களுக்கு என மொத்தம் கைவசம் ஒன்பது தேங்காய்கள் வைத்துக்கொள்வது உசிதம்.

இவை தவிர, ஐந்து வகையான பழங்கள், தாமரைப்பூ (மிக விசேஷம்), பஞ்சு மாலை, அம்பாள் முகம் (வெள்ளி, மண், ஜெர்மன் சில்வர் என பல உலோகங்களில் கிடைக்கிறது), கலசத்தில் அலங்கரிக்க புது வஸ்திரம் / புடவை ஆகியவை தேவை.

- வித்யா குருமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism