Published:Updated:

விலங்குகளும் சகுனங்களும்... பயணச் சகுனங்கள் என்னென்ன? - ஞான நூல்கள் சொல்வதென்ன?

சகுனங்களும் பலன்களும்
சகுனங்களும் பலன்களும்

சகுனங்கள் பலன்கள் குறித்து ஞான நூல்கள் பலவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றிலிருந்து நாம் சில அபூர்வத் தகவல்களை அறிந்துகொள்வோம்.

சகுன பலனகள் சுப சகுனம், அசுப சகுனம் என்று பிரித்தறியப்படுகின்றன. சகுனம் போன்றே நிமித்தம் எனும் முறையிலும் பலன் சொல்லப்படுவது உண்டு. தானே நிகழ்வது சகுனம் என்றும், நாம் நிகழ்த்துவது நிமித்தம் ஆகும். உதாரணமாக ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும்போது ஆலய மணி ஒலித்தால், அது நல்ல அறிகுறியைச் சொல்லும் சகுனம் ஆகும். அதே காரியம் நல்லபடியாக நடந்தேறுமா என்று தெய்வச் சந்நிதியில் நாம் பூக்களைப் போட்டு அவற்றில் ஒன்றை எடுத்து, பலனை அறிவது நிமித்த வகை ஆகும். சிலர், சகுனம் நிமித்தம் இரண்டும் ஒன்றே என்றும் கூறுவார்கள்.

சகுனங்கள் பலன்கள் குறித்து ஞான நூல்கள் பலவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றிலிருந்து நாம் சில அபூர்வத் தகவல்களை அறிந்துகொள்வோம்.

நாம் அன்றாட வாழ்வில் காணும் விலங்குகளும் சகுன பலன்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பறவைகள், விலங்குகள்
பறவைகள், விலங்குகள்

பயணத்தின் தொடக்கத்தில் நரி இடமிருந்து வலமாகவும், பூனையானது வலமிருந்து இடமாகவும் குறுக்கே பாய்ந்தால் நல்ல சகுனம் ஆகும். யானை, குதிரை ஆகியவற்றின் குரலைக் கேட்பதும் மங்கல சகுனமாகும். பயணம் தொடங்கும்போது நாய் எதிரில் வருவதும் வலமிருந்து இடப்புறத்தில் பாய்வதும் நன்று. அதுவே நம் மீது தாவி ஏற முயல்வதும் நம் கால்களை மிதிப்பதும் கூடாது.

வளர்ப்பு நாயானது நாம் புறப்படும்போது குறுக்கே நின்று குரைத்து நம்மைத் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், வழியில் திருடர்களால் தொல்லை ஏற்படும். நாய் நம் கால்களை நக்கினால் பயணத்தில் தடைகள் ஏற்படும்.

நாய்களின் செயல்களை வேறுசில சகுனங்களுக்கும் பொருத்திச் சொல்வார்கள். நாயானது வாயில் கயிறைக் கவ்விக்கொண்டு வந்தால் செல்வம் சேரும். நாய் முச்சந்தியில் நின்று கொண்டு ஊளையிடுவது கூடாது. நாய்கள் ஒன்றுகூடி விண்ணில் சூரியனை நோக்கிக் குரைத்தால், நாட்டில் ஆட்சி மாறும் என்பது பலன். மழைக்காலங்களில் புல் மேடு, வைக்கோல் கட்டு, மாடிப் படிகளில் நின்றபடி நாய்கள் குரைத்தால் அதிக மழை பொழியும்.

பயணச் சகுனங்கள்

சகுனங்களும் பலன்களும்!
சகுனங்களும் பலன்களும்!

பயணம் புறப்படும்போது எதிரில் சுமங்கலிப்பெண், மங்கல தீபம், மலர்கள், விசிறி, பால், பழங்கள், மஞ்சள், குடை, வளையல்கள், பசு, மான், கிளி, அந்தணர்கள் இருவர், முகம் பார்க்கும் கண்ணாடி, தயிர், மோர், குழந்தையைச் சுமந்து வரும் நபர், யானை, மயில் ஆகியவை வருவது சுபச் சகுனமாகும். இவ்வாறு நேர்ந்தால் போகும் காரியம் வெற்றிகரமாக முடியும்.

அதேநேரம் எண்ணெய், நெய், சலவை செய்யப்பட்ட துணி மூட்டை, ஆயுதங்கள், வேடன், குரங்கு, பாம்பு, கழுதை, ஆடு, பன்றி, நெருப்பு, ஏணி, சண்டை-சச்சரவு செய்யும் காட்சிகள், ஆயுதன் ஏந்தியவன் எதிரில் வருவதைக் கண்டால், பயணங்களில் தடைகள் உண்டாகலாம். எக்காரியத்துக்காக புறப்படுகிறோமோ, அந்தக் காரியத்தில் வெற்றி கிடைப்பது கடினம் என்று பலன் அறியலாம்.

- இத்துடன் சகுனங்களின் தன்மைகளும் வகைகளும், காகங்கள் சொல்லும் பலன், பிரச்னத்தில் சகுனங்கள் பங்கு, நோய் பற்றிய சகுனங்கள், மகப்பேறு தொடர்பான சகுனங்கள், பயணச் சகுனங்கள் ஆகியவற்றை முழுமையாக சக்தி விகடன் இதழில் அறிய > சகுனங்களும் பலன்களும்! https://bit.ly/3he91AZ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு