மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயில் மக்கள் அதிகம் வரக்கூடிய முக்கியமான வேண்டுதல் திருத்தலம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இக்கோயிலின் 70-வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்பு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதற்காக பக்தர்கள் விரதமிருந்து, அதிகாலை முதல் வைகையாற்றில் பால்குடம் எடுத்தும், வேல்குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் வேல் குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் வேண்டுதலை முடித்து சாமி தரிசனம் செய்தனர்.

வைகை ஆற்றிலிருந்து ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் வரை எங்கு பார்த்தாலும் பால்காவடி, வேல்காவடியுடன் பக்தி பரவசத்துடன் வந்த பக்தர்களால் மதுரையே நிறைந்திருந்தது பிரமாண்டமாக இருந்தது.
இத்திருவிழாவை முன்னிட்டு பல இடங்களில் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான விநியோகங்களைப் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.