Published:Updated:

`எந்தரோ மகானு பாவுலு...' சென்னையில் விசாகா ஹரி வழங்கும் ஹரிகதா வைபவம்!

ஹரிகதா
News
ஹரிகதா

கொரோனா காலகட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஹரிகதா நிகழ்வு ஒன்றைச் சென்னையில் நடத்த பள்ளியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

'ஹரிகதா' எனப்படும் ஹரிகதை காலட்சேபம் நம் பாரத நாட்டின் பழைமையான கலை வடிவங்களில் ஒன்று. எப்படிக் கோயில்களில் தரிசனம் செய்யும்போது நம் கண்களால் பகவானைக் காண்கிறோமோ அதேபோன்று ஹரிகதை கேட்கும்போது இறைவனின் தரிசனத்தை நம் மனக்கண்ணால் காண்போம். அந்த அளவுக்கு பக்திப் பெருக்கோடு நிகழ்த்தப்படும் நிகழ்வு அது. ஆனால் அந்தக் கலைவடிவத்தை அறிந்தவர்கள் தற்போது மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். நிகழ்த்துபவர்கள் குறையும்போது பார்ப்பவர்களும் கேட்பவர்களும் குறைந்துகொண்டே போவார்கள் என்பது இயல்பு. இப்படி நம் தேசத்தில் நாம் பாதுக்காக்கத் தவறிய கலை வடிவங்கள் அநேகம். அவற்றில் ஹரிகதாவும் இணைந்துவிடக்கூடாது என்று பல பாகவதோத்தமர்கள் முயன்று வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஶ்ரீமதி விசாகா ஹரி.

விசாகாஹரி மற்றும் மாணவர்கள்
விசாகாஹரி மற்றும் மாணவர்கள்

பரனூர் ஶ்ரீகிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சத்சங்கத்தைச் சேர்ந்த விசாகா ஹரி தன் இனிய இசையாலும் பக்தி ததும்பும் உபன்யாசங்களாலும் பலரின் வாழ்வில் இறைச் சிந்தனையைத் தோற்றிவிப்பவர். இவர் ஹரிகதா கலை வடிவத்தை மீட்டெடுக்க, 'விஜஶ்ரீ ஸ்கூல் ஆஃப் ஹரிகதா' என்பதை ஶ்ரீரங்கத்தில் 2020-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்தப் பள்ளியில், ஹரிகதா சொல்லித் தருவதோடு, பல்வேறு கலாசார பண்பாட்டுக் கலை வடிவங்களையும் போதித்து வருகிறார்கள். உதாரணமாக, சம்பிரதாய பஜன், சமஸ்கிருதம் ஆகியனவும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இந்த முயற்சிக்கு இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது. ஏராளமான இளைஞர்கள் இவ்வகுப்புகளில் இணைந்து கற்று வருகிறார்கள்.

கொரோனா காலகட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஹரிகதா நிகழ்வு ஒன்றைச் சென்னையில் நடத்த பள்ளியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி டிசம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை நாரத கான சபாவில் மாலை 4.30 மணிமுதல் 'மார்கழி வைபவம்' என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

விசாகா ஹரி மற்றும் மாணவர்கள்
விசாகா ஹரி மற்றும் மாணவர்கள்

இந்த நிகழ்வில் விஜயஶ்ரீ ஸ்கூல் ஆஃப் ஹரிகதா மாணவர்கள் வழங்கும் ஹரிகதை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் இந்த மூன்று நாள்களும் விசாகா ஹரி வழங்கும், 'எந்தரோ மகானு பாவுலு' என்னும் மூன்று நாள் தொடர் சொற்பொழிவும் நடைபெறும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அனைவரும் பயன் அடைவதோடு மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளியின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.