Published:Updated:

இந்த ஆண்டு திருப்பதியில் களைகட்டுமா பிரம்மோற்சவம்?

திருப்பதி பிரம்மோற்சவம்!
திருப்பதி பிரம்மோற்சவம்!

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரிய மாதம் என்று கருதுவார்கள். அந்த நாள்களில் விரதமிருந்து பெருமாளை வழிபட பக்தர்கள் நாடுமுழுவதும் இருந்து திருப்பதிக்கு வந்து கூடுவார்கள். கடந்த ஆண்டு 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாள்களும் திருப்பதி களைகட்டியிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படி பிரம்மோற்சவம் சிறப்புடன் நடைபெறுமா என்னும் சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி பெருமாள்

கொரோனா அச்சம் காரணமாக நாடுமுழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு ஜூன் 8-ம் தேதி மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது. அதையொட்டி ஜூன் 11-ம்தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுவந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்தது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 402 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும் திருமலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் எவ்வாறு நடைபெறும் என்னும் கவலை பக்தர்களிடையே நிலவி வருகிறது.

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரிய மாதம் என்று கருதுவார்கள். அந்த நாள்களில் விரதமிருந்து பெருமாளை வழிபட பக்தர்கள் நாடுமுழுவதும் இருந்து திருப்பதிக்கு வந்து சேர்வார்கள். கடந்த ஆண்டு 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி
திருப்பதி

இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். இவற்றுள் முக்கியமாக 23.9.2020 அன்று கருட வாகனமும், 26.9.2020 அன்று ரதோத்சவமும் நடைபெற வேண்டும். ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெறுமா என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும் விரைவில் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அதுபோன்ற கூடுகை சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 8,000 பக்தர்கள் என்னும் அளவிலேயே தரிசனம் செய்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு