Published:Updated:

பிரம்மகுமாரிகள் பற்றிய பாடலுக்கு `உலக அமைதி விருது’

`புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற பாடலுக்கு உலக அமைதிப் பாடல் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் `க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்’ என்கிற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.

Award function
Award function

உலகம் முழுவதும் பரவி ஆன்மிக சேவைகளில் ஈடுபட்டுவருகிறது `பிரம்மகுமாரிகள்' அமைப்பு. ஆன்மிக விழிப்புணர்வு, ஆன்மிக சாதனை இவற்றைத் தாண்டி, சமூகத்தில் தனிநபரின் பங்கு மற்றும் சுய வாழ்வின் குறிக்கோள் பற்றி நன்கு புரிந்துகொள்வதை ஊக்குவிப்பது, இயற்கையான சுயத்தின் நற்குணங்கள், சுயமரியாதை, ஆத்ம தரம் ஆகியவற்றை உறுதி செய்தல், உலகளாவிய சகோதரத்துவ உணர்வை வளர்த்தல் உள்ளிட்ட உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது பிரம்மகுமாரிகள் அமைப்பு.

Award function
Award function

இந்த அமைப்பு குறித்து எழுதி, இசையமைக்கப்பட்ட `புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற பாடலுக்கு உலக அமைதிப் பாடல் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் `க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்’ என்கிற அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.

இந்தப் பாடலை இசையமைப்பாளர் எஸ்.ஜே. ஜனனி இசையமைத்துப் பாடியுள்ளார். இந்தப் பாடலைக் கவிஞர் B. K. குமார் எழுதியுள்ளார். இந்தப் பாடல் `சிவ மகிமை’ எனும் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.

Award function
Award function
Vikatan

பாடகரும் இசையமைப்பாளருமான ஜனனியைக் கௌரவிக்கும் விதமாகப் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிக பல்கலைக்கழகம் அமைப்பின் சார்பாக நேற்று, சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஓய்வுபெற்ற டி.ஜி.பியும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜன், தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன், பிரம்மாகுமாரிகள் அமைப்பின் நுங்கம்பாக்கம் கிளை பொறுப்பாளர் சகோதரி பி.கே.சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.